Sunday, December 7
Shadow

மறைந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா பிறந்த தினம்

இவர் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஆவார். இவர் பல இளம் நடிகர்களை அறிமுகப்படுத்தியும் உள்ளர். ஷாம், ஆர்யா, வினய், அசின், தனிஷா(தமிழில்) ஆகியோர் இவரின் அறிமுகங்களே. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை தனது படங்களுக்கு பயன்படுத்தும் இவர் பல சிறந்த இசை வெளியீடுகளையும் வெளியிட்டுள்ளார் (12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே). இவர் ரஷ்யாவில் மாரடைப்பினால் 44 ஆவது வயதில் மரணமடைந்தார்.

இவர் இயக்கிய படங்கள்

12B, ரன், உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம்

இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய திரைப்படங்கள்

ஜென்டில்மேன், காதலன், ஆசை, இந்தியன், உல்லாசம், வாலி, குஷி, சிநேகிதியே, 12B, ரன், சச்சின், உள்ளம் கேட்குமே, சண்டக்கோழி, உன்னாலே உன்னாலே, தாம் தூம்