Saturday, June 27
Shadow

ஹிந்தி நடிகை கரீனா கபூர் பிறந்த தினம் இன்று

பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகையாவார். அவர் ஒரு திரைக் குடும்பத்தில் பிறந்தவர், அவருடைய பெற்றோர், தந்தை ரந்திர் கபூர் மற்றும் தாயார் பபிதா, அவருடைய முத்த சகோதரி கரிஸ்மா போன்றோர் திரைப்படங்களில் நடித்தவர்கள் ஆவார்கள், அதன் காரணமாக மிகவும் சிறிய வயதிலிருந்தே, கரீனா ஊடகத்தின் இடவொளியிலேயே திளைத்துக்கொண்டிருந்தார். இருந்தாலும், 2000 ஆண்டுவரை அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை, அவ்வாண்டில் அவர் முதன்முதலாக ரெப்யுஜீ என்ற படத்தில் தோன்றினார், மேலும் அதில் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது. அவர் நடித்த உணர்ச்சி மிக்க இன்ப முடிவுகொண்ட கபி குசி கபி கம் என்ற திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சந்தையில் மிகவும் அதிகமான தொகையை ஈட்டிய இந்தியப்படமாகும் மேலும் வணிகரீதியில் இன்று வரை அவருடைய மிகப்பெரிய வெற்றிப்படமுமாகும்.

2002 மற்றும் 2003 ஆண்டுகளுக்கிடையே திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடித்ததற்கு மக்களிடமிருந்து எதிர்மறை விமர்சனம் பெற்றதால், அச்சுமுகமாக தன் பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்காக அவர் துணிச்சலான பாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் விளைவாக, 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அவர் நடிப்பில் பெரும் பல்துறைத்திறமையை வெளிப்படுத்தியதற்காக ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பெற்றார். சமேலி (2004) என்ற படத்தில் அவர் ஒரு விலை மாதுவாக நடித்தது அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக திகழ்ந்தது மேலும் அதனால் அவருக்கு பிலிம்பேரின் சிறப்பு நடிகைக்கான பரிசும் கிடைத்தது. அதற்குப்பிறகு அவர் பிலிம்பேர் விழாவில், சிறந்த நடிகை என்று திறனாய்வாளர்களால் தெரிவுசெய்யப்பட்ட விருதுகளை தேவ் (2004) மற்றும் ஓம்காரா (2006) என்ற படங்களில் திறம்படத்தக்க என்று ஆர்பரிக்கப்பட்ட வகையில் நடித்ததற்கு இரண்டு விருதுகளை பெற்றார்.

2007 ஆம் ஆண்டில், இம்தியாஸ் அலி இயக்கிய ஜப் வீ மெட் என்ற காதல்நயம் கொண்ட நகைச்சுவைப் படத்தில் அவருடைய செயல்திறனுக்கு பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதை ஈட்டினார். அவர் நடித்த படங்களால் பாக்ஸ் ஆப்பீஸ் (கல்லாப்பெட்டி) பணப்பெட்டியில் குவிந்த வருமானத்தொகை மாறுபட்டிருந்தாலும், கரீனா தன்னை ஒரு முதன்மையான தற்காலத்து நடிகையாக இந்தி திரைப்பட உலகில் நிலைநாட்டியுள்ளார். கரீனாவின் நிஜ வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்தியாவில் ஊடகங்கள் காரணமாக எப்பொழுதும் செய்தி கிடைப்பதற்காக நிருபர்கள் பின்தொடர்ந்து சூழ்ந்துகொண்டே இருப்பதால் அவளைப் பற்றியும், அவளுடைய நண்பரான நடிகர் சைஃப் அலி கானைப் பற்றியும் அடிக்கடி கிசுகிசுக்கள் எழுந்துகொண்டே இருந்தன, அவர்கள் இருவரும் மணம் செய்துகொள்ளப்போவதாக வதந்திகள் பரவலாக உலவியது

2007 ஆம் ஆண்டில், கரீனா ஷாகித் கபூருக்கு எதிராக இம்தியாஸ் அலியின் காதல்நயம்கொண்ட நகைச்சுவைப்படமான ஜப் வீ மெட் டில் நடித்தார். இரு வேறுபட்ட மனோபாவங்கள் கொண்ட மக்கள் ரயிலில் பயணிக்கும்போது சந்தித்து மற்றும் இறுதியில் காதல்வயப்படும் இக்கதையில், கரீனா கீத் தில்லண் என்ற படைப்பில் முதன்மை வாய்ந்த, சீக்கியரினத்தை சார்ந்த, வாழ்க்கையை உற்சாகம் மிக்க ஆர்வத்துடன் ரசித்துவாழத்துடிக்கும் பெண்ணாக தோன்றுகிறார். இப்படம் திறனாய்வாளர்களால் நன்றாக வரவேற்கப்பெற்றது. மேலும் அவ்வருடத்தின் மிகவும் வெற்றிபெற்ற படங்களில் ஒன்றாக அது திகழ்ந்தது, அதன் மூலம் உள்நாட்டில் கிடைத்த மொத்த வருமானமானது ரூ 303 மில்லியன் (US$ 6.45 மில்லியன்) ஆகும். கரீனா அவருடைய நடிப்பிற்காக பல விருதுகளைப்பெற்றார், அதில் பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதும் அடங்கும் மேலும் அவருக்கு அவருடைய இரண்டாவது ஸ்டார் சிறப்பு நடிகைக்கான திரைப்பட விருதும் கிடைத்தது. சிஎன்என்-ஐபிஎன் (CNN-IBN) னின் ராஜீவ் மசாந்த் குறிப்பிட்டது, “தடையில்லாமலும் இயல்பாகவும் நடித்த கரீனா கபூர் இப்படத்தின் ஆத்மாவாகும், இப்படத்தின் மிகப்பெரிய வலிமை, அவர் அந்த சூட்டிகையான வசனங்களோடு மட்டுமல்லாமல், இதர நடிகர்களிம் காண இயலாத ஒரு விதமான வெளிப்படைத்தன்மையுடன் அந்த பாத்திரத்தை சித்தரித்து உயிர்கொடுத்திருக்கிறார்.”

ஜப் வீ மெட் டிற்குப்பிறகு, கரீனா அக்ஷய் குமார், ஸைப் அலி கான் , மற்றும் அணில் கபூருடன் தஷான் என்ற சண்டைக்காட்ச்சிகள் நிறைந்தபடத்தில் (2008) நடித்தார். இந்தியா எப்எம் (indiaFM) என்ற நிறுவனம் நடத்திய வாக்களிப்பு அப்படத்தை அவ்வருடத்தின் மிகுந்த எதிபார்ப்புகளுடன் கூடிய படமாக கோஷித்தபோதும், நாளடைவில் தஷான் வணிகரீதியிலும் மற்றும் உய்யநிலையிலும் தோல்வியை தழுவியது. அடுத்ததாக கரீனா யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னீ பிக்ச்சர்சின் கார்டூன் படமான ரோட்சைட் ரோமியோ (Roadside Romeo) வில் லைலா என்ற தெருநாய்க்கு குரல் கொடுத்தார், அந்த நாய் ரோமியோ என்ற தெருநாயின் காதல்நாயகியாகும். ஒரு ஹாலிவுட் ஸ்டுடியோவால் வடக்கு அமெரிக்காவில் வெளியிட்ட பாலிவுட்டின் இரண்டாவது படம் இதுவேயாகும். இதற்கு ஆயத்தம் செய்வதற்காக, கரீனா பல ஹாலிவுட் அசைவூட்டிய படங்களை பார்த்து நடிகர்கள் எப்படி குரல் கொடுத்தனர் என்பதை அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தார். கரீனா இதர திட்டங்களில் கவனம் செலுத்தியதால், இப்படத்தை சரியாக ஆதரிக்காமல் விட்டதற்காக திறனாய்வாளர்கள் குறை கூறினர்.

2006 ஆம் ஆண்டில் வெளிவந்த கோல்மால் என்ற படத்தை ஆதாரமாக கொண்டு, அதன் பின்தொடற்சியாக வந்த கோல்மால் ரிடேர்ன்ஸ் என்ற ரோஹித் ஷெட்டியின் நகைச்சுவைப் படத்தில் கரீனா அடுத்ததாக நடித்தார். அஜய் தேவ்கன், அர்ஷத் வார்சி, துஷார் கபூர், ஸ்ரேயஸ் தால்பாடே, அம்ரிதா அரோரா, செலினா ஜைத்லீ, மற்றும் அஞ்சனா சுகானி போன்றோர் அடங்கிய ஒரு நடிகர்களின் குழுமத்தின் அங்கமாக இருந்து, கரீனா தனது கணவனின் கற்பை சந்தேகிக்கும் மனைவியாக நடித்தார். இந்தப்படத்திற்கு திறநாய்வாளர்களிடமிருந்து ஒரு கலவையான விமரிசனம் கிடைத்தது மற்றும் கபூருக்கு கலவையுடன் கூடிய விமரிசனமே பெற்றுத்தந்தது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்தின் திரைக்கதை உயிரூட்டம் இல்லாததாக குறிப்பிட்டது மேலும் “கணவன் மீது சந்தேகம் கொண்ட ஒரு பெண்மணி குறிப்பாக தன் கணவன்மீது ஒரு கண் வைத்திருப்பது பெரிய நூதனமான விசயமல்ல, மேலும் அந்த பாத்திரத்தை கையாள்வதில் கரீனா புதுமை எதையும் புகுத்தவுமில்லை.” இருந்தாலும், கோல்மால் ரிடேர்ன்ஸ் ஒரு பெரிய வெற்றிப்படமாக திகழ்ந்தது, ரூ 793 மில்லியன்($17.84 மில்லியன்) மற்றும் உள்நாட்டில் மட்டும் மேலாக வருமானம் ஈட்டியது.

2009 ஆம் ஆண்டில், கரீனா அக்ஷய் கானுடன் கம்பக்த் இஷ்க் என்ற சபீர் கானின் நகைச்சுவைப்படத்தில் நடித்தார். இரு வேறுபட்ட மனிதர்களிடையே நிலவும் உறவுகளை ஆராய்ந்து பார்க்கும் இப்படம், இந்தியப்பட வரலாறில் கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட்டின் யூனிவெர்சல் ஸ்டூடியோஸ் ஹாலிவுட் டில் படமானது மேலும் பல ஹாலிவுட் நடிகர்கள் சிறு வேடங்களில் அவ்வப்போது தோன்றினார்கள்.[60] கரீனா சிம்ரிதா ராய் என்ற பாத்திரத்தில் நடித்தார், ஒரு பகுதிநேர முதன்மையான முன்மாதிரியாகவும், மற்றும் ஒரு அறுவை மருத்துவநிபுணராக விரும்பும் பெண்ணாகவும் அவர் இருந்தார். படம் வெளிவந்த பிறகு, படத்திற்கு எதிர்மறை விமரிசனங்கள் குவிந்தன மேலும் கபூரின் நடிப்பு சரிவர வரவேற்கப்படவில்லை. தி டைம்ஸ் ஒப் இந்தியா அவர் நடிப்பை “ஒரு முழுமையான ஏமாற்றம்” என்று விவரித்தது மட்டுமல்லாமல், “அவர் ஒரு முதன்மையான முன்மாதிரியாகவோ, அல்லது ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவோ, இருப்பதாக தெரியவில்லை” என்று சூளுரைத்தது. இருந்தாலும் இப்படம் பொருளாதார வெற்றி அடைந்தது, மேலும் உலகளவில் சுமாரான வருமானத்தை ஈட்டியதுரூ 840 மில்லியன்($18.9 மில்லியன்)

ஆகஸ்ட் 2009 வரையான நிலவரத்தின் படி, கரீனா பிரேம் சோனியின் படமான மை அவுர் மிஸ்ஸிஸ். கன்னா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, அதில் அவர் சல்மான் கானுடன் நடிக்கிறார். மேலும் அவர் ராஜ்குமார் ஹிரானியின் த்ரீ இடியட்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார், அதன் முக்கிய படப்பிடிப்பு ஜுலை 2008 ஆம் ஆண்டில் தொடங்கியது.