Sunday, December 8
Shadow

இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் பிறந்த தினம் இன்று

தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

சீனிவாசராவ் தெலுங்கு நயோகி பிராமண குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து இயற்பியல் பட்டம் பெற்றார். திரையுலகில் முதலில் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் ஹரிந்திரநாத் சட்டோ பாத்யாய், கே.வி. ரெட்டி மற்றும் பிங்கலி நாகந்திரராவ் ஆகியோருடன் இணை இயக்குனராகப் பணியாற்றினார். மாயா பஜார் (1957), பெல்லி நாட்டி பிரமானலு (1958), ஜகதேக வீரணி கதா (1961), ஸ்ரீ கிருஷ்ணர்ஜுனா யுத்தம் (1963), சத்யா ஹரிச்சந்திரா (1965) முதலியன. 1972 ஆம் ஆண்டு முதல் இயக்குனராக கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அறுபது திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

தமிழில் கமலுடன் இணைந்து, தேசிய விருது பெற்ற இயக்குநரான சிங்கீதம் சீனிவாசராவ் ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்) , மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம் என இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வசூல் மற்றும் பாராட்டுக்களைக் குவித்தவை. சிங்கீதம் சீனிவாச ராவ் 2008 இல் ‘கடோத்கஜ்” என்ற உயிரோவியத் திரைப்படத்தை இயக்கினார். இது கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவர் இயக்கிய அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்) முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து 1989ல் உருவாக்கிய பல புதிய சாதனைகள் படைத்தது.