Friday, January 17
Shadow

இயக்குனர் மகேந்திரன் பிறந்த தின பதிவு

மகேந்திரன் புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.

மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற குறும்புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ்த் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாக வைத்துப் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தைத் திரைப்படமாக்கத் திரைக்கதை, உரையாடல் போன்றவற்றை எழுதி வைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனைத் திரைப்படமாக்க முடியாமல் போனது.

இவர் இயக்கிய படங்கள்: முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, மெட்டி, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை எழுது, ஊர்ப் பஞ்சாயத்து, சாசனம்

இவர் கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்: தங்கப்பதக்கம், நாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்காரப் பிள்ளை, நிறைகுடம், திருடி, மோகம் முப்பது வருஷம், ஆடு புலி ஆட்டம், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷிமூலம், தையல்காரன், காளி, பருவமழை, பகலில் ஒரு இரவு, அவளுக்கு ஆயிரம் கண்கள், கள்ளழகர், சக்கரவர்த்தி, கங்கா, ஹிட்லர் உமாநாத், நாங்கள், தொட்டதெல்லாம் பொன்னாகும், சொந்தமடி நீ எனக்கு, அழகிய பூவே, நம்பிக்கை நட்சத்திரம்