Friday, January 17
Shadow

இயக்குனர் ஷங்கர் பிறந்த தின பதிவு

ஷங்கர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இவர் இயக்கிய படங்கள்: ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன் , சிவாஜி: தி பாஸ், எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2

இவர் தயாரித்த படங்கள்: முதல்வன், காதல், இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, வெயில், கல்லூரி, அறை எண் 305-இல் கடவுள், ஈரம்,ரெட்டைசுழி