Wednesday, June 24
Shadow

இயக்குனர் யுவராஜ் தயாளன் பிறந்த தினம் 

யுவராஜ் தயாளன், எம் ராஜாவிடம் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்திலும் சிம்பு தேவனிடம் இரும்பு கோட்டையில் முரட்டு சிங்கம் போன்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது தெனாலி ராமன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
யுவராஜ் தயாளன் தமிழ்நாட்டின் செங்கல்பட்டைச் சார்ந்தவர். சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தை எம். ராஜா இயக்கியபோது அவரிடம் உதவி இயக்குநராகவும், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கிய போது அவரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
சடகோபன் ரமேஷ் நடித்த போட்டா போட்டி நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத் தமிழ்த் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் திரைப்படத்தின் வாயிலாகச் சிறப்பாக அறியப் பெற்றார். இவரது தந்தையின் பெயர் தீனதயாளன் ஆகும்.
இவர் இயக்கிய திரைப்படங்கள் 
போட்டா போட்டி, தெனாலிராமன், எலி