
“எல்லோரையும் நம்பாதே” – வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்த ரவி மோகன்; மனதை தொட்ட ‘ஜாலி ஓ ஜிம்கானா’ எபிஸோட்!
சென்னை:
நடிகர் ரவி மோகனின் திரை வாழ்க்கை, குடும்ப பாசம், நட்பு மற்றும் வாழ்க்கைப் பாடங்கள் ஆகியவற்றை ரசிகர்களுக்கு நெருக்கமாக எடுத்துக்காட்டிய ஒரு உணர்வுபூர்வமான எபிஸோடாக SUN NXT-இல் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் ஐந்தாவது பகுதி அமைந்தது.
பொதுவாக ரசிகர்கள் திரையில் பார்க்கும் ரவி மோகனை விட, மனிதராகவும் மகனாகவும் தந்தையாகவும் நண்பராகவும் இருக்கும் அவரது உண்மையான முகத்தை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே, தனது இளம் வயதிலிருந்த ரவி மோகனுக்கு இன்று அறிவுரை சொல்ல வேண்டுமெனில் என்ன சொல்வீர்கள் என்ற கேள்விக்கு, “எல்லோரையும் நம்பாதே” என்ற ஒற்றை வரி பதிலை அவர் அளித்தார். அந்த பதில் அவரது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த அனுபவங்களின் பிரதிபலிப்பாக இருந்தது.
தனது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை குறித்து பேசிய ரவி மோகன், கல்வியில் அல்ல, சினிமாவில்தான் தனது முழு கவனமும் கனவும் இருந்ததாக பகிர்ந்துகொண்டார். “எனக்கு பிடித்த விஷயத்திற்காக நான் முழுமையாக உழைப்பேன்; எனக்கு அது சினிமா,” என்ற அவரது வார்த்தைகள், திரையுலகின் மீதான அவருடைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தின.
திரைப்பட உலகில் தனது ஆரம்ப கால அனுபவங்களையும் அவர் நினைவுகூர்ந்தார். ஒரு சாதாரண ஸ்பாட் பாயாகத் தொடங்கிய பயணம் இன்று நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு பரிமாணங்களை அடைந்திருப்பதை பகிர்ந்த அவர், சினிமாவே தனது வாழ்க்கையை வடிவமைத்ததாக கூறினார். தனது தந்தையைப் பற்றிப் பேசும்போது, “திரைப்படங்களை அதன் சுவையை வைத்தே அவர் அடையாளம் காண்பார்” என்ற நினைவுகளை பகிர்ந்துகொண்டது பார்வையாளர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
நிகழ்ச்சியில் இடம்பெற்ற ரசிகர்களின் கருத்துகள் மற்றும் இணைய விமர்சனங்களுக்கு அவர் அளித்த நகைச்சுவையான பதில்களும் கவனம் பெற்றன. குறிப்பாக ஒரு கமெண்டை சுட்டிக்காட்டி, “அவனை கொஞ்சம் இங்க வர சொல்லு” என அவர் கூறிய விதம் அரங்கையே சிரிப்பில் ஆழ்த்தியது.
அதே நேரத்தில், ‘காரசாரம் சேலஞ்ச்’ உள்ளிட்ட சுவாரஸ்யமான பகுதிகளில் கலந்துகொண்டு தனது குறும்பான பக்கத்தையும் வெளிப்படுத்தினார். மேலும், தனது திரைப்பயணம் குறித்த பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் அவர் நேர்மையாக பதிலளித்தார்.
நிகழ்ச்சியின் உச்சக்கட்ட தருணமாக அமைந்தது அவரது குடும்பத்தைப் பற்றிய பகிர்வுகள்தான். எந்த நடிகரின் நடிப்பு தன்னை மகிழ்ச்சியடையச் செய்வதோடு சிறிது பொறாமையையும் ஏற்படுத்துகிறது என்ற கேள்விக்கு, “என் மகன் ஆரவ் ரவி” என்று அவர் தயக்கமின்றி பதிலளித்தார். ஒரு தந்தையாக மகனின் திறமையை பெருமையுடன் பாராட்டிய அந்த தருணம் பார்வையாளர்களின் மனதை வென்றது.
அதேபோல், திரையுலகில் முழுமையாக நம்பிக்கை வைக்கும் நண்பர் யார் என்ற கேள்விக்கு நடிகர் கார்த்தியின் பெயரை குறிப்பிட்ட ரவி மோகன், “என்னைப் பற்றியும் அவரும் இதே கருத்தைத்தான் கூறுவார் என்று நம்புகிறேன்” என்றார். நட்பின் மீது அவர் வைத்துள்ள மதிப்பை இந்த பதில் வெளிப்படுத்தியது.
இறுதியில், தனது பிரபலமான ‘மக்கமிஷி’ பாடலை பரதநாட்டிய வடிவில் மாற்றி நிகழ்த்தியதோடு, தொகுப்பாளர் ஜெகனுக்கும் அந்த அசைவுகளை கற்றுக்கொடுத்த ரவி மோகன், நிகழ்ச்சியை மகிழ்ச்சியான நினைவுகளுடன் நிறைவு செய்தார்.
ரசிகர்கள் விரும்பும் பல பிரபலங்கள் பங்கேற்கும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் புதிய எபிஸோட்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் SUN NXT தளத்தில் வெளியாகி வருகின்றன.

“Don’t Trust Everyone” – Ravi Mohan Shares Life Lessons in an Emotional Episode of ‘Jolly O Gymkhana’
Chennai:
The fifth episode of Jolly O Gymkhana, streaming on SUN NXT, turned out to be an emotional and heartwarming experience as actor Ravi Mohan opened up about his journey in cinema, family values, friendships, and life lessons.
More than showcasing the star that audiences see on screen, the episode revealed Ravi Mohan as a son, father, friend, and an individual shaped by his experiences. When asked what advice he would give his younger self, Ravi Mohan responded with a simple yet powerful statement: “Don’t trust everyone.” His answer reflected the lessons he has learned throughout his life and career.
Speaking about his school and college days, Ravi Mohan admitted that academics were never his primary focus, as his heart was always set on cinema. “Whenever I truly love something, I dedicate myself completely to it. For me, that thing is cinema,” he shared, highlighting his passion and commitment to filmmaking.
The actor also reminisced about his early days in the film industry, revealing that his journey began as a spot boy before evolving into that of an actor and producer. He credited cinema for shaping his life and career. Reflecting on his father, Ravi Mohan fondly recalled, “My father could identify films just by their essence,” a memory that struck an emotional chord with viewers.
The episode also featured reactions to various online comments and opinions about him. His witty response to one particular comment—“Ask him to come here for a moment”—left the audience laughing and showcased his sense of humor.
Participating enthusiastically in the show’s fun-filled “Karasaram Challenge” segment, Ravi Mohan displayed his playful side while also answering several intriguing questions about his film career with remarkable honesty.
One of the most touching moments of the episode came when he spoke about his family. Asked which actor’s performance makes him both happy and slightly jealous, Ravi Mohan immediately named his son, Aarav Ravi. His heartfelt admiration for his son’s talent won over everyone present.
Similarly, when asked who the one friend in the film industry he trusts completely is, Ravi Mohan named actor Karthi. Smiling, he added, “I believe he would say the same about me.” The response highlighted the strong bond and mutual respect shared between the two actors.
The episode concluded on a cheerful note as Ravi Mohan transformed his popular hip-hop track Makkamishi into a Bharatanatyam performance and patiently taught the dance steps to host Jagan, creating a memorable and entertaining finale.
Featuring several beloved celebrities, Jolly O Gymkhana continues to offer audiences candid conversations and delightful moments. New episodes premiere every Thursday exclusively on SUN NXT.
Subheading:
Pride in his son Aarav, unwavering trust in Karthi, and reflections on life’s experiences—Ravi Mohan’s heartfelt conversation leaves viewers deeply moved.
