
இயக்குநரிலிருந்து நாயகனாக உயர்ந்த பாலாஜி சக்திவேல்… ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ மூலம் புதிய பரிமாணம்
சென்னை:
தமிழ் சினிமாவில் இயக்குநராக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பாலாஜி சக்திவேல், தற்போது நடிகராகவும் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அவர், தற்போது ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ என்ற பைலட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பது திரையுலகில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநராக பல வெற்றிப் படைப்புகளை வழங்கிய பாலாஜி சக்திவேல், கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும் தனது கலைப் பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார். ‘டிஎன்ஏ’, ‘காந்தி கண்ணாடி’ மற்றும் ‘வாரண்ட்’ இணையத் தொடர் உள்ளிட்ட படைப்புகளில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு பரவலான பாராட்டுகளை பெற்றது. அந்த வரிசையில், தற்போது வெளியாகவுள்ள ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படம் அவரது நடிகர் வாழ்க்கையில் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர். முத்துராமன் எழுதி இயக்கியுள்ள இந்த 12 நிமிட பைலட் திரைப்படம், ஒரு காவல்துறை அதிகாரிக்கும் சாதாரண மனிதருக்கும் இடையே உருவாகும் உளவியல் மோதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உணர்வுகள், பதற்றம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதைக்களம் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
குறும்படங்கள் மற்றும் பல்வேறு காட்சிப்படுத்தல் முயற்சிகள் மூலம் தனது திரைப்பட அனுபவத்தை வளர்த்துக் கொண்ட ஏ.ஆர். முத்துராமன், தனது ட்ரீம் ஃபிக்ஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் இந்த முயற்சியை உருவாக்கியுள்ளார். சினிமா மீது கொண்ட ஆர்வத்தையும் கதை சொல்லும் திறமையையும் வெளிப்படுத்தும் முக்கிய படைப்பாக ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாலாஜி சக்திவேலுடன் ருக்மணி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் கொட்டாச்சி, ஆறு பாலா, பிரதீப் மற்றும் மீசை ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிரபாகரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நரேந்தர் இசையமைத்துள்ளார். ஆண்டனி தாசன் பாடியுள்ள நிலையில், லெனின் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
சமூக யதார்த்தத்தையும் மனித உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Director-Turned-Actor Balaji Sakthivel Explores a New Dimension with ‘Off The Record’
Chennai:
Acclaimed filmmaker Balaji Sakthivel, who has successfully established himself as a versatile actor in recent years, is set to take on a new challenge as the lead protagonist in the pilot film Off The Record. The project has already generated considerable interest among cinema enthusiasts and industry circles.
Known for his impactful storytelling as a director, Balaji Sakthivel has steadily built a reputation as a performer by choosing meaningful and realistic roles. His performances in films such as DNA, Gandhi Kannadi, and the web series Warrant received appreciation for their emotional depth and authenticity. With Off The Record, he continues his journey as an actor by portraying a character with multiple layers and dimensions.
Written and directed by A.R. Muthuraman, Off The Record is a 12-minute pilot film that revolves around the emotional and psychological conflict between a police officer and an ordinary man. Blending tension, human emotions, and unexpected twists, the film aims to deliver a thought-provoking cinematic experience.
A.R. Muthuraman, who has honed his craft through several short films and visual storytelling projects over the years, considers Off The Record a significant milestone in his filmmaking journey. Produced under his banner, Dream Fiction Studios, the project reflects his passion for cinema and commitment to meaningful storytelling.
The film features Balaji Sakthivel and Rukmani in lead roles, while Kottachi, Aaru Bala, Pradeep, and Meesai Rajendran play pivotal supporting characters.
The technical team includes cinematographer Prabakaran, music composer Narendra, singer Anthony Daasan, and editor Lenin.
With its realistic narrative and emotionally engaging storyline, Off The Record is expected to leave a strong impression on audiences. Further updates about the project are expected to be announced soon.
