
‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத் தொடக்க விழா: முதலமைச்சர் விஜய்க்கு டாக்டர் ஐசரி கே. கணேஷ் வரவேற்பு
சென்னை: தமிழக அரசின் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்க சென்னை தி லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார்.
வேல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து முதலமைச்சரை வரவேற்று, நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு அழைத்துச் சென்றார்.
தமிழகத்தில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக அரசின் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காகவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளில் சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகளைப் பாராட்டி கௌரவிப்பதற்காகவும் முதலமைச்சர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முக்கியப் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விளையாட்டுத் துறையில் தமிழகத்தின் சாதனைகளை அங்கீகரிப்பதோடு, எதிர்காலத்தில் சர்வதேச அளவில் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்கான முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

Dr. Ishari K. Ganesh Welcomes Tamil Nadu Chief Minister C. Joseph Vijay at ‘Dream Olympics’ Launch Event
Chennai: Dr. Ishari K. Ganesh, President of the Tamil Nadu Olympic Association and Founder-Chancellor of Vels University, warmly welcomed Tamil Nadu Chief Minister Thiru C. Joseph Vijay with a bouquet upon his arrival at The Leela Palace Hotel in Chennai for the launch of the Tamil Nadu Government’s ‘Dream Olympics’ initiative.
Dr. Ishari K. Ganesh, who also serves as Chairman of the Vels Group of Institutions, joined Sports Development Minister Aadhav Arjuna in welcoming the Chief Minister and escorting him to the event venue.
The Chief Minister attended the event to launch the state government’s ‘Dream Olympics’ initiative and honour Tamil Nadu’s athletes who have achieved distinction at the Asian Games and the Chess Olympiad.
Organised by the Sports Development Authority of Tamil Nadu (SDAT), the event brought together distinguished guests, athletes, and sports officials to recognise sporting excellence and celebrate the achievements of Tamil Nadu’s sporting talent.
The initiative reflects the state’s continued commitment to strengthening sports development and encouraging athletes to achieve greater success on national and international platforms.
