‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத் தொடக்க விழா: முதலமைச்சர் விஜய்க்கு டாக்டர் ஐசரி கே. கணேஷ் வரவேற்பு
‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத் தொடக்க விழா: முதலமைச்சர் விஜய்க்கு டாக்டர் ஐசரி கே. கணேஷ் வரவேற்பு
சென்னை: தமிழக அரசின் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்க சென்னை தி லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார்.
வேல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து முதலமைச்சரை வரவேற்று, நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு அழைத்துச் சென்றார்.
தமிழகத்தில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக அரசின் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காகவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செஸ் ஒலி...
