Thursday, September 17
Shadow

துல்கர் சல்மானின் ‘AOT’ நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது – எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்பு

துல்கர் சல்மானின் ‘AOT’ நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது – எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்பு

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆகாசம்லோ ஓக தாரா’ (AOT) படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து வரும் துல்கர் சல்மான், இந்தப் படத்திலும் புதிய களத்தில் தோன்றவுள்ளார்.

‘AOT’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.

வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, படத்திற்கான அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை தீவிரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் ‘AOT’ எப்படி அமைகிறது என்பதைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பவன் சாதினேனி இயக்கும் இப்படத்திற்கு கங்கராஜு குன்னம் கதை எழுதியுள்ளார். ஒளிப்பதிவை சுஜித் சாரங் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பை ஸ்வேதா சாபு சிரில் கவனிக்கிறார்.

லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குண்ணம் மற்றும் ரம்யா குண்ணம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்குகின்றன.

தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகும் ‘AOT’, நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கிறது.

‘AOT’ படக்குழு:

நடிப்பு: துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்
இயக்கம்: பவன் சாதினேனி
கதை: கங்கராஜு குன்னம்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: சுஜித் சாரங்
தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்வேதா சாபு சிரில்
தயாரிப்பு: சந்தீப் குண்ணம், ரம்யா குண்ணம் – லைட்பாக்ஸ் மீடியா
வழங்குபவர்கள்: கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா

Dulquer Salmaan’s AOT Set for November 20 Release; Expectations Rise

The much-awaited film AOT (Aakasamlo Oka Tara), starring Dulquer Salmaan in the lead, is gearing up for a theatrical release on November 20. The makers officially announced the release date today, adding to the anticipation surrounding the project.

Directed by Pavan Sadineni, the film features Dulquer Salmaan, Satvika Veeravalli and Shruti Haasan in key roles. With Dulquer known for choosing stories that offer something different, AOT has already managed to create curiosity among moviegoers.

The excitement around the film received another boost with the release of its first single recently. The song has been receiving a positive response from listeners and has further drawn attention to the film’s music. National Award-winning composer G.V. Prakash Kumar is scoring the music for the project.

With the release date now locked, the makers are gearing up for an extensive promotional campaign in the coming weeks. The team is expected to unveil more updates and promotional material as the film gets closer to its theatrical release.

AOT brings together an interesting combination of talent behind the camera as well. Pavan Sadineni is directing the film, while Gangaraju Gunnam has penned the story. Sujith Sarang is handling the cinematography and acclaimed production designer Shwetha Sabu Cyril is in charge of the production design.

The film is produced by Sandeep Gunnam and Ramya Gunnam under the banner of Lightbox Media and is presented by Geetha Arts and Swapna Cinema.

AOT is set to release in Telugu, Tamil, Hindi and Malayalam, making it a pan-Indian release. With its promising cast and crew, the film is now gearing up to meet audiences in theatres on November 20.

AOT – Cast & Crew

Cast: Dulquer Salmaan, Satvika Veeravalli, Shruti Haasan and others
Director: Pavan Sadineni
Story: Gangaraju Gunnam
Music: G.V. Prakash Kumar
Cinematography: Sujith Sarang
Production Design: Shwetha Sabu Cyril
Producers: Sandeep Gunnam, Ramya Gunnam – Lightbox Media
Presented by: Geetha Arts, Swapna Cinema