
மற்றவர்களுக்கு ஜோடி தேடும் டேட்டிங் ஆப் நிறுவனர்கள்… தங்களுக்குள் காதல் வந்தால்? – #Love
காதலுக்கு கெமிஸ்ட்ரி முக்கியமா? கம்ஃபோர்ட்டா?
இன்றைய காதல் உலகில் இந்தக் கேள்விக்கு பதில் தேடுவது அவ்வளவு சுலபமில்லை. ஒரு ஸ்வைப், ஒரு மேட்ச், ஒரு மெசேஜ்… இப்படி ஆரம்பிக்கும் இன்றைய உறவுகள் சில நேரங்களில் எதிர்பாராத இடத்தில் கொண்டு போய் நிறுத்திவிடுகின்றன. அப்படியொரு எதிர்பாராத காதல் கதையை, டேட்டிங் ஆப்களின் உலகைப் பின்னணியாகக் கொண்டு சொல்ல வருகிறது நெட்ஃப்ளிக்ஸின் புதிய தமிழ் தொடர் ‘#Love’.
அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும் வெளியாகும் இந்தத் தொடரை சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் உருவாக்க, பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடிக்கும் இந்தத் தொடர், இருவரையும் ஒரு புதிய ஜோடியாகக் காட்டுகிறது.
கதையின் மையத்தில் இருப்பவை FOUND மற்றும் Find My Bae எனும் இரண்டு போட்டி டேட்டிங் ஆப்கள்.
மற்றவர்களுக்கு அவர்களுக்கான சரியான துணையைத் தேடிக் கொடுப்பதையே தொழிலாக வைத்திருக்கும் இந்த இரண்டு ஆப்களின் நிறுவனர்கள் தாரா மற்றும் மேத்யூ. ஆனால், ஒரு சின்ன பிரச்சினை — மற்றவர்களின் காதலைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் இவர்களால், தங்களுக்கான காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதில் சுவாரஸ்யமான திருப்பமாக, போட்டியாளர்களாக இருக்கும் தாராவும் மேத்யூவும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். தாங்கள் காதலைப் பற்றி வைத்திருக்கும் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் தங்களுக்குள்ளேயே சோதித்துப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகிறது.
அதன்பிறகு நடப்பது வெறும் காதல் கதை மட்டும் அல்ல.
போட்டி, நட்பு, குடும்பம், லட்சியம், உறவுகள்… இவற்றுக்கு நடுவே காதல் எங்கே நிற்கிறது? என்பதையும் #Love பேசுகிறது.
இன்றைய தலைமுறைக்கு காதல் என்றாலே நினைவுக்கு வருவது டேட்டிங் ஆப்கள் மட்டுமல்ல. ‘மெசேஜ் பார்த்தும் ஏன் ரிப்ளை பண்ணவில்லை?’, ‘நம்ம இருவருக்கும் உண்மையிலேயே கெமிஸ்ட்ரி இருக்கிறதா?’, ‘இந்த உறவு சரியானதா?’ என உறவைப் பற்றியே தொடர்ந்து யோசித்துக் கொண்டிருப்பதும் இன்றைய காதலின் ஒரு பகுதிதான்.
அந்த நவீன காதல் அனுபவங்களை சீரியஸாக மட்டும் சொல்லாமல், நகைச்சுவையுடனும் உணர்வுகளுடனும் அணுகுகிறது #Love.
இந்தத் தொடரைப் பற்றி நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்க துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில், இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியக் கதைகளில் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இன்றைய உறவுகளை மையமாகக் கொண்ட இந்தத் தொடரில், போட்டியாளர்களாக இருக்கும் இரண்டு டேட்டிங் ஆப் நிறுவனர்கள் தங்களது காதல் குறித்த கருத்துகளையே ஒருவரை ஒருவர் சந்திப்பதன் மூலம் சோதித்துப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாலாஜி மோகனின் இயக்கமும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஷோ-ரன்னர் மற்றும் தயாரிப்புப் பணியும் தொடருக்கு ஒரு புதிய அணுகுமுறையைத் தந்துள்ளதாகவும், அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து உருவாக்கும் உறவில் நகைச்சுவை, இயல்பு மற்றும் கெமிஸ்ட்ரி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது, இன்றைய உறவுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை இயல்பாகச் சொல்வதோடு, காதலின் உணர்வுகளையும் அன்பையும் விட்டுவிடாமல் கதை சொல்லப்பட்டிருப்பதே #Love-ஐத் தன்னை ஈர்த்த முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
பாலாஜி மோகன் உருவாக்கியுள்ள கதாபாத்திரங்கள் லட்சியங்களைக் கொண்டவர்களாகவும், குறைகளுடன் இருப்பவர்களாகவும் இருப்பதால், அவர்களுடன் பார்வையாளர்கள் எளிதாகத் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் பாலாஜி மோகனின் பார்வையிலும் இந்தத் தொடரின் மையம் அதுதான். காதல் மாறியிருக்கிறது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் விதம் மாறியிருக்கிறது. ஆனால், ஒரு உறவுக்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகள் மட்டும் இன்னும் மாறவில்லை.
அதனால் #Love-ல் இரண்டு பேர் காதலில் விழும் கதை மட்டுமே சொல்லப்படவில்லை. அவர்களுடைய நட்பு, குடும்பம், லட்சியம், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தங்களைப் பற்றிய புரிதல் ஆகியவையும் கதையின் முக்கிய பகுதிகளாக இருக்கின்றன.
நிர்மல் வில்லியம்ஸ் தொடரை எழுதியுள்ளார். ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். May6 Entertainment Factory நிறுவனம் தொடரைத் தயாரித்துள்ளது.
அப்படியானால், காதலில் உண்மையில் ஜெயிப்பது எது?
கெமிஸ்ட்ரியா? கம்ஃபோர்ட்டா?
மற்றவர்களுக்கு காதலைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் இரண்டு டேட்டிங் ஆப் நிறுவனர்கள், தங்களது காதலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க…
‘#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்!

What Happens When Dating App Experts Can’t Find Love for Themselves? #Love Arrives on Netflix
Chemistry or compatibility — what really matters in love? Netflix’s new Tamil series #Love explores the question through two rival dating-app founders who may know everything about finding the perfect match… except when it comes to themselves.
Love has changed.
Gone are the days when romance always began with a chance meeting or a long conversation. Today, it can start with a swipe, turn into a match and move forward with a message. But while technology may have changed the way people meet, the emotions that come with falling in love remain surprisingly familiar.
That idea forms the heart of #Love, a new Tamil series premiering October 2 exclusively on Netflix.
Showrun and produced by Soundarya Rajinikanth and directed by Balaji Mohan, the series brings together Arjun Das and Aishwarya Lekshmi in a fresh pairing.
Set in the competitive world of dating apps, #Love revolves around two rival platforms — FOUND and Find My Bae.
Their founders, Tara and Matthew, have made a business out of helping other people find their ideal partners. Ironically, when it comes to their own love lives, neither of them seems to have quite figured things out.
Things take an interesting turn when the two rivals cross paths. What begins as a professional rivalry soon becomes a situation where they are forced to question everything they believe about love, relationships and compatibility.
And that is where #Love looks beyond the usual romantic-comedy formula.
The series explores not just the possibility of two people falling in love, but also the role of friendship, family, ambition and self-discovery in shaping a relationship.
For anyone who has ever stared at a phone wondering why a message hasn’t been answered, questioned whether there is genuine chemistry with someone, or overthought where a relationship is heading, the world of #Love promises plenty of familiar moments.
Speaking about the series, Monika Shergill, Vice President, Content, Netflix India, said that Netflix has been increasing its focus and investment in storytelling from South India. She described #Love as a contemporary, feel-good romantic comedy that brings a fresh perspective to modern relationships.
According to her, the series follows two rival dating-app founders who end up testing their own theories about love on each other. She also highlighted the playful approach brought by Balaji Mohan’s direction and Soundarya Rajinikanth’s work as showrunner and producer, along with the warmth, humour and chemistry between Arjun Das and Aishwarya Lekshmi.
For Soundarya Rajinikanth, what makes #Love interesting is its ability to portray modern relationships naturally without losing the warmth and emotion at the heart of love.
She describes the characters as ambitious and flawed, making them relatable to audiences, while Arjun Das and Aishwarya Lekshmi bring a fresh energy to their roles.
Director Balaji Mohan sees the series as a story that belongs firmly to the present day. While romance and the way people meet have evolved, he believes the emotions at the core of relationships remain familiar.
That is why #Love is not simply about two people falling for each other. Their journey also involves friendship, family, ambition and understanding who they are as individuals.
The series is written by Nirmal Williams, with Sharada Subramanian and Shweta Chakravarty serving as co-writers. It is produced by May6 Entertainment Factory.
So, when it comes to finding the right person, what really wins — chemistry or compatibility?
Tara and Matthew are about to find out the answer the hard way.
#Love premieres October 2, only on Netflix.
