Thursday, August 13
Shadow

ஓணம் ரேஸில் அதிரடி கிளப்பும் துல்கர் சல்மான்… ‘ஐ அம் கேம்’ டிரெய்லர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

ஓணம் ரேஸில் அதிரடி கிளப்பும் துல்கர் சல்மான்… ‘ஐ அம் கேம்’ டிரெய்லர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘ஐ அம் கேம்’ (I Am Game) படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அதிரடி, மர்மம், ஃபேன்டஸி மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையை ஒருங்கே இணைத்துள்ள இந்த டிரெய்லர், படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films தயாரித்துள்ள இந்த திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படைப்பாகக் கருதப்படுகிறது. இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

தொடக்கம் முதல் இறுதிவரை வேகமான திரைக்காட்சிகள், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், பரபரப்பான சேஸ் சீக்வென்ஸ்கள் மற்றும் கண்கவர் காட்சியமைப்புகள் என டிரெய்லர் ரசிகர்களை முழுமையாக ஈர்க்கிறது. குறிப்பாக, இதற்கு முன்பு காணாத அளவிற்கு ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றத்தில் துல்கர் சல்மான் காட்சியளிப்பது சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

திரைக்கதையை சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர் மற்றும் பிலால் மொய்து இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜிர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் வடிவமைத்துள்ளனர். கதை சொல்லும் விதமும், காட்சிகளின் பிரம்மாண்டமும் இந்த திரைப்படம் வழக்கமான ஆக்ஷன் படங்களை விட மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் என்பதற்கான அறிகுறிகளை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.

தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், தொழில்நுட்ப ரீதியிலும் மிகுந்த கவனம் செலுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித் வழங்கியுள்ள காட்சிகள், திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்துகின்றன. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் அமைத்துள்ள பின்னணி இசை டிரெய்லருக்கு கூடுதல் வலிமையை அளிக்கிறது. படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் கைப்பற்றியுள்ளது. அதிரடி சண்டைக் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.

‘லோகா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த முக்கிய படைப்பாக உருவாகியுள்ள ‘ஐ அம் கேம்’, துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ‘RDX’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த திரைப்படம் என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் கவனம் அதிகரித்துள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக ‘ஐ அம் கேம்’ வெளியாக உள்ளது.

தொழில்நுட்பக் குழு:

  • தயாரிப்பு: Wayfarer Films
  • தயாரிப்பாளர்கள்: துல்கர் சல்மான், ஜோம் வர்கீஸ்
  • இயக்கம்: நஹாஸ் ஹிதாயத்
  • திரைக்கதை: சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து
  • வசனம்: சஜிர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத்
  • ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்
  • இசை: ஜேக்ஸ் பிஜாய்
  • படத்தொகுப்பு: சமன் சாக்கோ
  • சண்டைக் காட்சிகள்: அன்பறிவ் மாஸ்டர்கள்
  • தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி
  • மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்
  • உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா
  • VFX: தௌஃபீக் (Eggwhite)
  • ஒலி வடிவமைப்பு: Sync Cinema
  • சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி
  • போஸ்டர் வடிவமைப்பு: Ten Point
  • மக்கள் தொடர்பு: யுவராஜ்

Dulquer Salmaan’s ‘I Am Game’ Trailer Raises Expectations Ahead of Grand Worldwide Release on August 20

The much-awaited trailer of ‘I Am Game’, starring Malayalam superstar Dulquer Salmaan, has been unveiled, creating a wave of excitement among movie lovers. Packed with high-octane action, fantasy, suspense, and visually stunning sequences, the trailer has significantly heightened expectations for what is being billed as one of the biggest Malayalam films of the year.

Produced under Wayfarer Films, the movie is the most ambitious and expensive project in Dulquer Salmaan’s career to date. Directed by Nahas Hidayath, the film is jointly produced by Dulquer Salmaan and Jom Varghese.

From its opening moments to the final frame, the trailer impresses with breathtaking visuals, large-scale action set pieces, and adrenaline-pumping chase sequences. Dulquer Salmaan’s stylish and intense screen presence has become one of the biggest talking points, with fans praising his never-seen-before mass avatar across social media platforms.

The screenplay has been penned by Sajir Baba, Ismail Aboobacker, and Bilal Moidu, while the dialogues are written by Sajir Baba, Adarsh Sukumaran, and Shabas Rasheed. The trailer hints at a gripping narrative that blends fantasy elements with edge-of-the-seat thrills.

Shot across more than 100 locations in South India, I Am Game promises a grand cinematic experience. Cinematographer Jimshi Khalid delivers spectacular visuals that elevate the film’s scale, while Jakes Bejoy’s powerful background score adds tremendous energy to the trailer. The film’s audio rights have been acquired by Zee Music. The action sequences have been choreographed by the acclaimed Anbariv Masters.

Following the blockbuster success of ‘Loka’, I Am Game marks the next prestigious production from Wayfarer Films. The film also holds special significance as it is Dulquer Salmaan’s 40th feature film.

The ensemble cast includes Antony Varghese, Mysskin, Kayadu Lohar, Kathir, Parth Tiwari, and Samyuktha Viswanathan in pivotal roles. The film is also the next directorial venture of Nahas Hidayath after the massive success of ‘RDX’, further adding to the anticipation.

I Am Game is all set for a grand worldwide theatrical release on August 20, 2026, coinciding with the Onam festival. The film will be released as a Pan-India project in Malayalam, Tamil, Telugu, Hindi, and Kannada.

Technical Crew

  • Production Banner: Wayfarer Films
  • Producers: Dulquer Salmaan, Jom Varghese
  • Director: Nahas Hidayath
  • Screenplay: Sajir Baba, Ismail Aboobacker, Bilal Moidu
  • Dialogues: Sajir Baba, Adarsh Sukumaran, Shabas Rasheed
  • Cinematography: Jimshi Khalid
  • Music: Jakes Bejoy
  • Editor: Saman Chacko
  • Action: Anbariv Masters
  • Production Designer: Ajayan Chalissery
  • Makeup: Ronex Xavier
  • Costume Designer: Mashar Hamsa
  • VFX: Thoufeeq (Eggwhite)
  • Sound Design: Sync Cinema
  • Sound Mix: Kannan Ganapathy
  • Poster Design: Ten Point
  • Public Relations: Yuvraaj