கதிர் திரை விமர்சனம் (4/5)
தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெங்கடேஷ் அப்பாத்துரை நடிப்பில் உருவாக்கியுள்ள கதிர் படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.
இன்ஜினியரிங் படித்துவிட்டு ஊரில் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ வெங்கடேஷ் சென்னையில் தனது நண்பர் ரூமில் தங்கி வேலை தேடுகிறார். ஆங்கிலத்தில் தடுமாறும் இவர் வேலை கிடைக்காமல், தண்ணியடித்துவிட்டு சுற்றித் திரிகிறார். பின்பு இவர் தங்கி இருக்கும் வீட்டு ஓனர் ஆக வரும் ரஜினி சாண்டி ஹீரோவிற்கு புத்திமதி சொல்லி திருத்துகிறார். பின்பு ஹீரோ வெங்கடேஷ்க்கு வேலை கிடைத்ததா? அடுத்து அவர் என்ன செய்தார்? என்பதே கதிர் படத்தின் ஒன்லைன்.
தற்போது இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சுற்றித்திரியும் பல இளைஞர்கள் ஹீரோ கதாபாத்திரத்துடன் தங்களை ஒன்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு அவர் செய்யும் செயல்கள் அவ்வளவு எதார்த்தமாக உள்ளது. ஹீரோவின் நண்பர்களாக வரும் ஒவ்வொரு வரும் சிறப்பாகவே நட...

