Friday, August 14
Shadow

உண்மைச் சம்பவங்களின் நிழலில் உருவான ‘நிறம்’… டி. இமான் இசையில் பரபரப்பை கிளப்பிய டிரெய்லர் வெளியீடு!

உண்மைச் சம்பவங்களின் நிழலில் உருவான ‘நிறம்’… டி. இமான் இசையில் பரபரப்பை கிளப்பிய டிரெய்லர் வெளியீடு!

மலையாளம், தமிழ் என பல மொழிகளில் தொடர்ந்து வித்தியாசமான உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், அந்த வரிசையில் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட கிரைம்-இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படம் தற்போது திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

“Inspired from True Incidents” என்ற அடைமொழியுடன் வெளியாகியுள்ள டிரெய்லர், வழக்கமான கிரைம் திரைப்படங்களை விட வித்தியாசமான திரைக்கதையையும், பரபரப்பான விசாரணை பாணியையும் வெளிப்படுத்தியதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. காட்சியமைப்பு, பின்னணி இசை மற்றும் திரைக்கதை உருவாக்கிய எதிர்பார்ப்பு சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

விழாவில் பேசிய இசையமைப்பாளர் டி. இமான், இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோதே படத்தில் புதுமையான ஒரு கிரைம் திரில்லர் இருப்பதை உணர்ந்ததாக கூறினார். முதல் படத்தை இயக்கும் இயக்குநர் என்ற எண்ணமே வராத அளவிற்கு பலராம் கிருஷ்ணா தெளிவான கண்ணோட்டத்துடன் பணியாற்றியிருப்பதாகவும், கதையின் உணர்வுகளை இசையின் மூலம் இன்னும் வலுப்படுத்த முயன்றதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்தார்.

இயக்குநர் பலராம் கிருஷ்ணா, “நிறம் என்பது ஒரு தலைப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், சூழ்நிலையும் மாறும் போது அவர்களின் வாழ்க்கையும் மாறுகிறது. அந்த மாற்றங்களின் பின்னணியில்தான் இந்தக் கதை உருவாகியுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையின் முன்னேற்றத்திற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. தரமான உள்ளடக்கத்தை ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்,” என்றார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் முகன், இந்த வாய்ப்பு தனது பயணத்தில் முக்கியமானதாக அமைந்துள்ளதாக கூறினார். இயக்குநரின் நம்பிக்கையும், படப்பிடிப்பில் வழங்கப்பட்ட சுதந்திரமும் தனது நடிப்பை மேலும் சிறப்பாக்கியதாக அவர் தெரிவித்தார். டி. இமான் இசையில் நடிப்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், படத்தை திரையரங்குகளில் கண்டு ஆதரிக்குமாறும் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

நடிகர் நிதின் சத்யா, இந்த திரைப்படம் தனக்கு மிகவும் நெருக்கமானது என்றும், நண்பரான பலராம் கிருஷ்ணாவின் கனவு திரைப்படம் என்பதால் நடிகராக மட்டுமல்லாமல், பல்வேறு பணிகளில் ஒருங்கிணைப்பாளராகவும் இணைந்து செயல்பட்டதாக கூறினார். படக்குழுவில் உள்ள அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்திருப்பதாகவும், படத்தின் வெற்றி ரசிகர்களின் கைகளில்தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகைகள் தான்யா ஹோப் மற்றும் ப்ரீந்து மாதவி ஆகியோர், படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்வதாகவும், திரையரங்குகளில் ரசிகர்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

பாடகிகள் ஸ்ரீநிஷா மற்றும் பிரவஸ்தி ஆகியோர், டி. இமான் இசையில் பாடிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக “நூதனா” பாடல் தங்களது மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளதாக தெரிவித்தனர். பிரவஸ்தி, இது தனது முதல் தமிழ் திரைப்படப் பாடல் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

நடன அமைப்பாளர் சாய் பாரதி, “நூதனா” பாடலுக்கான நடன அமைப்பு கொடைக்கானலின் இயற்கை எழிலில் படமாக்கப்பட்டதால் காட்சிகள் மிகவும் அழகாக அமைந்துள்ளதாகவும், நடிகர்கள் சிறப்பாக ஒத்துழைத்ததாகவும் தெரிவித்தார்.

‘நிறம்’ திரைப்படத்திற்கு சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ள நிலையில், தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். தாமோதரன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். கே. பிந்து மாதவி தயாரித்துள்ள இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக பி. ராஜேஷ் பணியாற்றியுள்ளார்.

பரபரப்பான விசாரணை, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் உண்மைச் சம்பவங்களின் தாக்கத்துடன் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படம், கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை டிரெய்லர் உருவாக்கியுள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

‘Niram’ Audio and Trailer Launch: D. Imman’s Music Elevates a Crime Thriller Inspired by True Incidents

The makers of ‘Niram’, an intense crime investigation thriller inspired by true incidents, unveiled the film’s audio and official trailer at a grand launch event held in the presence of members of the film fraternity, media representatives, and the entire cast and crew. Produced by K Square Cinemas and directed by debutant Balaram Krishna, the film has already begun generating curiosity with its intriguing premise and gripping visuals.

Carrying the tagline “Inspired from True Incidents,” the trailer offers a glimpse into a suspense-filled investigative thriller packed with unexpected twists, emotionally driven characters, and a compelling narrative. The trailer has received an encouraging response from audiences, with viewers praising its intense storytelling, striking visuals, and D. Imman’s powerful background score.

Speaking at the event, music composer D. Imman said he was immediately impressed by the story when he first heard it. He described Niram as a refreshing crime thriller with a unique narrative and praised director Balaram Krishna for handling his debut film with the confidence and clarity of an experienced filmmaker. Imman also appreciated the dedication of the cast and technicians, expressing confidence that audiences would connect with the film.

Director Balaram Krishna shared that Niram is much more than just a title. According to him, the film explores how people’s emotions, personalities, and decisions change with circumstances, forming the emotional core of the story. He revealed that every scene and every character has been carefully designed to serve the narrative and expressed confidence that audiences would embrace the film’s strong content.

Making his return as a lead actor in Tamil cinema after a long gap, Mugen said he was delighted to be part of the project. He thanked the director for believing in him and giving him the freedom to perform his character naturally. Mugen also described working with D. Imman as a dream come true and requested audiences to support the film in theatres.

Actor Nithin Sathya stated that Niram is a very personal project for him, as it was born out of his long-standing friendship with director Balaram Krishna. Besides acting in the film, he also contributed behind the scenes in coordinating several aspects of the production. He praised the commitment shown by the entire team and urged audiences and the media to support quality cinema.

Actresses Tanya Hope and Preethi Madhavi expressed their happiness at being part of the film and thanked the director and producers for the opportunity. They conveyed their confidence that audiences would enjoy the film’s engaging storyline and performances.

Playback singers Srinisha and Pravasthi spoke about their experience recording songs for the film. Srinisha described “Noothana” as one of her favourite melodies composed by D. Imman, while Pravasthi said singing for Niram marked her Tamil playback debut, making it a dream come true.

Choreographer Sai Bharathi shared that choreographing the song “Noothana” was a memorable experience, especially with its picturesque shoot in Kodaikanal. He appreciated the support of the actors and the film’s technical team for bringing the song to life beautifully.

The film features cinematography by Santonio Tercio, editing by V. J. Sabu Joseph, action choreography by Dinesh Subbarayan, and production design by Damodharan. Niram is produced by K. Bindhu Madhavi, with P. Rajesh serving as the co-producer.

With its gripping premise, intriguing investigation, and strong technical team led by D. Imman, Niram is expected to offer audiences a fresh and engaging crime thriller experience. The makers have announced that the film’s official release date will be revealed soon.