
ஐந்து மொழிகளில் காதலை பேச வருகிறது ‘ஃபீல் மை லவ்’ – ஆகஸ்டில் பான் இந்தியா ரிலீஸுக்கு தயாராகும் புதிய காதல்-நகைச்சுவை!
சென்னை:
தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக, காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைக்கும் பான் இந்தியா திரைப்படமாக ‘ஃபீல் மை லவ்’ உருவாகி வருகிறது. இயக்குநர் ஹரி பிரகாஷ் எம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், வருகிற ஆகஸ்ட் மாதம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகத் தயாராகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல முன்னணி படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்ததுடன், பல பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்ட அனுபவம் கொண்ட தயாரிப்பாளர் ஏ.என். பாலாஜி, முதன்முறையாக தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் என்பதால் ‘ஃபீல் மை லவ்’ மீது திரையுலகில் தனி எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ், பிரியங்கா ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார்.
‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவை கவனித்துள்ள நிலையில், ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி ஆகியோர் இசையமைத்துள்ளனர். ‘லவ்’, ‘கொலை சேவல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றிய அஜய் மனோஜ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
“வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்” என்ற நம்பிக்கையூட்டும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், காதலை நகைச்சுவையுடன் இணைத்து, மனித உறவுகளின் அழகையும், உணர்வுகளின் ஆழத்தையும், எதிர்பாராத திருப்பங்களையும் இயல்பான திரைக்கதையின் மூலம் சொல்லவிருக்கிறது.
இளைஞர்களை மட்டுமல்லாமல் குடும்ப பார்வையாளர்களையும் கவரும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு அழைத்து வரும் படமாக ‘ஃபீல் மை லவ்’ இருக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
சென்னை மற்றும் புதுச்சேரியில் முக்கிய படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது மூனார் மலைப்பகுதியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனுடன், திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் ‘ஃபீல் மை லவ்’, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களின் மனதை கவரும் புதிய காதல் அனுபவமாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

‘Feel My Love’ Set for a Pan-India Release in Five Languages This August
Chennai: A refreshing blend of romance, comedy, and heartfelt emotions, ‘Feel My Love’ is gearing up for a grand Pan-India release in August. Written and directed by Hari Prakash M, the film is being simultaneously made in Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi.
The project marks the Tamil production debut of renowned producer A. N. Balaji, who has earned a strong reputation for distributing several successful Tamil films in Telugu and Kannada, besides releasing numerous Pan-India blockbusters across India.
The film features an impressive ensemble cast including M. S. Bhaskar, Adithya Bhaskar, Aira, Ammu Abhirami, Rajayappa, Noble James, Priyanka, and Madhusudhan Rao in a pivotal role.
Cinematography is handled by M. S. Satheesh, who received appreciation for his work in House Mates. The music is composed by Rajaravivarma S and Balasubramanian G, while editing is by Ajay Manoj, known for his work in LOVE, Kolai Seval, and several acclaimed commercial projects.
Built around the uplifting theme, “A miracle can happen at any stage of life,” Feel My Love promises an engaging cinematic experience filled with memorable moments, relatable relationships, heartfelt emotions, humor, and unexpected twists. Director Hari Prakash M says the film has been crafted to strike an emotional chord with audiences while delivering wholesome entertainment.
The makers are confident that the film’s warm narrative and engaging screenplay will appeal equally to youngsters and family audiences, making it a complete entertainer for all age groups.
Principal photography has been completed in Chennai and Puducherry, while the final schedule is currently progressing at a brisk pace in the scenic hills of Munnar.
With a simultaneous release planned in Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi, Feel My Love aims to reach audiences across India as a true Pan-India entertainer.
Meanwhile, preparations are underway for the film’s grand audio launch and trailer launch event, the details of which will be announced soon.
