கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களான சிம்புவும் கவுதம் கார்த்திக்கும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக கடந்த மாதம் செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான சிவராஜ்குமாரின் ‘முஃப்தி’ என்ற அதிரடி ஆக்சன் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் சிம்பு கேங்க்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கவுள்ளனர். சிம்பு ஏற்கனவே ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் கேங்க்ஸ்டராக நடித்திருந்தாலும் கவுதம் கார்த்திக் முதல்முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது