
தளபதிக்கு போட்டியாக பொங்கல் ரேசில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பார்த்திபன் விஜய் சேதுபதி இந்த மூவரும் போட்டி என்று இருந்த இந்த நேரத்தில் நான் நடிகன் ஆவதற்கு முக்கிய காரணம் என் அண்ணன் தளபதி தான் அவருடன் நான் ரேசில் இல்லை.
கடவுள் இருக்கான் குமாரு படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ப்ரூஸ்லீ. இப்படத்தின் மூலம் நடிகர் ஜி.வி.பிரகாஷ் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.
இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கிருத்தி கர்பண்டா நடித்துள்ளார். பிரபல தெலுங்கு மற்றும் கன்னட பட நடிகையான அவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவேயாகும். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படம் வரும் பொங்கலன்று விஜய்யின் பைரவாவுடன் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இதில் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது படம் பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
