முயற்சி உடையான் இகழ்ச்சி அடியான் என்பது ஒரு கருத்து அந்த கருத்து எடுத்துகாட்டு தான் கஜினிமுகமதுதொடர் தொல்விலும் துவண்டு போகாமல் போராடி வெற்றி கண்டவர் தான் கஜினிமுகமது இந்த கருத்தை மையமாக வைத்து அதோடு ரஜினிகாந்தையும் வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கஜினிகாந்த்
தொடர்ந்து இரட்டை அர்த்தங்கலான படங்கள் மூலம் வெற்றி கண்ட இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் அருமையான குடும்ப காமெடி காதல் கதை படமும் இந்த கஜினிகாந்த் என்றும் சொல்லலாம் இதற்கு முன் ஹர ஹர மாகதேவ் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படங்கள இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார் படமா என்று ஆச்சர்ய படுத்தும் படம் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த வித ஆபாசம் இல்லாமல் வெறும் நகைசுவை அதோடு அழகான காதலை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார்
இந்தியா மீது 17 முறை படையெடுத்தவர் கஜினிமுகமுது. விடாமுயற்சிக்கு உதாரணமாக அவரைச் சொல்வார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், மறதிக்காரரை மையமாகக் கொண்ட கதைக்கு கஜினி என்று பெயர் வைத்தவுடன், கஜினி என்றால் மறதிக்காரர் என்ற அடையாளம் வந்துவிட்டது.
கஜினிகாந்த் அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
தர்மத்தின்தலைவன் பட ரஜினி போல் ஞாபக மறதிக்காரர் ஆர்யா. ஒரே நேரத்தில் அழகான பெண்ணின் காதலுக்கும், காதலியின் அப்பாவுடைய தீவிர வெறுப்புக்கும் ஆளாகிறார் ஆர்யா.காதலில் வென்றாரா? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ஏற்கெனவே வந்த பல படங்களின் காட்சிகளை நினைவுபடுத்தினாலும் சிரிப்புக்குப் பஞ்சமில்லை. ஞாபகமறதிக்காரர் வேடத்துக்கு ஆர்யா பொருத்தமாக இருக்கிறார். படம் முழுக்கச் சிரிக்கவைப்பது, காதலி நிராகரித்துவிட்டாள் என கலங்கி அழும்போது, படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு சண்டைக்காட்சியில் சிறப்பாகச் சண்டை போடுவதுமென எல்லாவற்றையும் செய்துவிட்டார்.
அவருக்குப் பக்கபலமாக கருணாகரனும் சதிஷூம். இருவரில் யாருடைய தேதி கிடைக்கிறதோ அவரை ஆர்யாவோடு கோர்த்துவிடுகிறார் இயக்குநர். அவர்களும் ஆர்யாவின் பேச்சுக்குப் பொருத்தமாகப் பதில் பேசி சிரிக்கவைக்கிறார்கள்.
நாயகி சாயிஷா அழகுப்பதுமை. தமிழ் சினிமாவுக்கும் மிக அருமையான நடிகை அழகு நடிப்பு நடனம் என்று எல்லாத்திலும் மிகவும் கைதேர்ந்த ஒரு நடிகை என்று தான் சொல்லணும் அதோடு தொடர்ந்து வெற்றி படங்கள் மேலும் தமிழ் சினிமாவின் ராசி நடிகை பட்டியலில் இடம் பிடிக்கிறார் சாயிஷா பாடல்களில் உடலழகைக் காட்டி மகிழ்விக்கிறார். நடிக்கவும்
நாயகியின் அப்பாவாக வரும் சம்பத், நாயகனின் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோரும் சிறப்பு. அதிலும் ஆடுகளம் நரேனின் ஆட்டம் அதிரடி.இதுவரை கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரத்தில் வந்த நரேன் இந்த படம் மூலம் நகைசுவை நடிகராகவும் தடம் பதிக்கிறார்
மொட்டை ராஜேந்திரன், நீலிமாராணி, உமாபத்மநாபன் ஆகியோர் தங்கள் பங்கை நன்றாகச் செய்திருக்கின்றனர்.
வில்லனாக வரும் லிங்கேஸ் இந்த படம் மூலம் லிஜீஷ் என்ற பெயரில் நடித்துள்ளார் படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். ஆகிறார் கவனிக்கவைக்கிறார்.
பள்ளுவின் ஒளிப்பதிவு,படத்துக்கு மிக பெரிய பலம் படத்தின் காட்சிகள் ஓவியம போல ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலமுரளிபாலுவின் இசை ஆகியனவும் படத்துக்குத் தேவையான அளவு இருக்கிறது.
ஒருவரிக் கதையை வைத்துக்கொண்டு சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சந்தோஷ்பிஜெயகுமார்.
இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமலும் வாய்விட்டுச் சிரிக்க வைக்கலாம் என்பதற்கு இப்படம் சிறந்த எடுத்துக்காட்டு. இயக்குனர் சந்தோஷ் இரட்டை அர்த்தம இல்லாமல் ஒரு தரமானகுடும்ப படம் கொடுக்க முடியும் என்பதை இந்த படம் மூலம் நிருபித்துள்ளார்.
மொத்தத்தில் கஜினிகாந்த் ஒரு ரஜினிகாந்த் Rank 3.5/5