
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மேலும் ஒரு புதிய நல் இயக்குனர் ஓடம் இளவரசு என்று சொல்லலாம் படத்தில் நீங்கள் பெரியதாக ஆராச்சி எல்லாம் பண்ண கூடாது திரையரங்குக்கு சென்று நீங்கள் கொடுக்கும் காசுக்கு உங்களை நிச்சயம் மகிழ்விக்குறார் என்று தான் சொல்லாம் படத்தில் கதை என்பது பெரிதாக கிடையாது ஆனால் படம் முழுக்க சிரித்து சிரித்து மகிழலாம் அந்த அளவுக்கு ரசனையாக எடுள்ளார் என்று தான் சொல்லணும்.
படத்தின் முதல் காட்சிலிருந்து இறுதி காட்சி வரை நம்மை சிரிக்கவைக்கிறார் இயக்குனர் என்று தான் சொல்லணும் அதே போல இன்றய இளைஞர்களுக்கு இந்த படம் மிக பெரிய தீனி என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு காதல் காட்சிகள் ஆனால் எந்த ஒரு ஆபாசம் இல்லமல் என்றும் சொல்லலாம் இரட்டை வசனங்கள் இல்லாமல் சிறப்பாக செய்துள்ளார் படத்தில் நான்கு நாயகிகள் நாலுபேரும் அடேங்கப்பா சும்மா கலக்குறாங்க சரி படத்தின் கதை தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்று பார்ப்போம.
படத்தில் நாயகனாக என்று சொல்லவதை விட ப்ளே பாய் என்று சொல்லலாம் அதோடு முதல் முறையாக காமெடியில் செம போட்டி போட்டு இருக்கும் அதர்வா தான்ஜெமினி கணேஷன் சுருளியாக சூரி இந்த படத்தின் மூலம் காமெடி யில் நான் தான் என்று நிருபித்துள்ளார் என்று கூட சொல்லலாம் படத்தில் நாலு காதலால் ஏமாறும் நாயகிகள் ஆனாலும் எல்லோரும் சும்மா நச்ன்னு இருக்காங்க குறிப்பாக ரெஜினா காஸ்ன்றா ப்ரனிதா ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அறிமுக நயாகியாக அதிதி போகன்கர் நாயகன் அப்பாவாக இல்லை அடபாவியாக அம்மா கிரியேஷன் சிவா ஒன்னும் தெரியாத அம்மா சோனியா எப்பவும் போல கூடுதல் நண்பன் மொட்டை ராஜேந்திரன் சூரி சொல்லி இருப்பதை அப்படியே கொஞ்சம் கூட சிதறாமல் சிறப்பாக சிரிப்பாக செய்துள்ளார். படத்தில் மேலும் சில நகைசுவை நடிகர்கள் எல்லோரும் அவர்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்
கதை களம்
அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது டைட்டில் தான் கதை ஜெமினி கணேஷன் என்றால் என்ன காதல் மன்னன் அது தான் படம் முழுதும் காதல் மன்னனாக வருகிறார். அதர்வா பார்க்கும் அழகனா பெண்களை உடனே காதலிப்பார் பின்னர் எப்படி கழட்டிவிட்டு எஸ்கேப் ஆகிறார் என்பது தான் கதை அவர் செய்த லீலைகளை கேட்டு நொந்து போகும் சூரி கடைசியில் சூரிக்கு ஒரு செக் வைத்துள்ளார் கதையில் இயக்குனர் அதேபோல இந்த காதல் மன்னனை ஒரு பெண் திருத்துகிறாள் யார் அந்த பெண் எப்படி திருத்துகிறாள் என்பது தான் கதை இதை மிகவும் சிரிப்பாக சிறப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்
படத்துக்கு மிக பெரிய பிளஸ் என்றால் இம்மான் பாடல்கள் என்று சொலமாட்டேன் காரணம் ஏற்கனவே கேட்ட டியூன்ஸ் என்று தான் சொல்லணும் மிக பெரிய பிளஸ் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன் ஊட்டியை கண்ணுக்கு குளிர்ச்சியாக காண்பிதுள்ளார் அதேபோல வைரபாலன் செட் அனைத்தையும் மிகவும் சிறப்பாக காண்பிதுள்ளார் வைரபாலன் செட் எல்லாம் பிரமாதம் இயக்குனர் ஏற்கனவே சொன்னதுபோல தன் முதல் படத்திலே தான் ஒரு வர்த்தக இயக்குனர் என்று நிருபித்துள்ளார் .
மொத்தத்தில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் கலகலப்பு கிளுகிளுப்பு Rank 3/5