Thursday, March 27
Shadow

த்ரிஷா மற்றும் நயன்தாராவால் முடியும் என்னால் முடியாதா போட்டி போடும் காஜல் அகர்வால்

தமிழ் சினிமா மட்டும் இல்லை தெலுங்கிலும் மிக முக்கிய நடிகை என்றால் அது காஜல் அகர்வால் என்று தான் சொல்லணும். தமிழில் மிக முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேரும் நாயகி காஜல் என்று சொல்லணும் இதுவரை கதாநாயகியாக வலம் வந்த காஜல்க்கு புது ஆசை என்ன தெரியுமா?

காஜல் அகர்வாலின் கைவசம் தற்பொழுது மூன்று படங்கள் இருக்கிறன. அஜித்துடன் ‘விவேகம்’, விஜய்யுடன் ‘மெர்சல்’ மற்றும் ராணா டகுபதியுடன் தெலுங்கில் ‘ நானே ராஜூ நானே மந்திரி’ என மூன்று படங்களுக்குமானப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் காஜல்அகர்வால்.

த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போலவே இவரும் சீனியர் நடிகைதான். ஆனால் இதுவரை, அவர்களைப் போல் கதாநாயகி முக்கியத்துவம் உள்ள படங்களில் காஜல் நடிக்கவில்லை. அதற்கான வாய்ப்பு இயக்குநர் பி.வாசு மூலமாக அவரைத் தேடி வந்திருக்கிறது.

கதாநாயகி முக்கியத்துவம் கொண்ட கதை ஒன்றை பி.வாசு சமீபத்தில் காஜலுக்குச் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன கதை பிடித்துவிட, உடனே யெஸ் சொல்லியிருக்கிறார் காஜல். தற்பொழுது ஆஸ்திரேலியாவில் இருக்கும் பி.வாசு சென்னை திரும்பியதும் படத்திற்கான முதல் கட்டவேலைகளைத் தொடங்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது

Leave a Reply