Tuesday, October 27
Shadow

இரண்டு சூப்பர்ஸ்டார்களை வைத்து படம் இயக்குவேன் ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குனர் முருகதாஸ் ஏற்கனவே இரண்டு விஜய் படங்களை இயக்கி அது இரண்டும் மிக பெரிய வெற்றி படங்கள் என்பது நாம் அறிந்த விஷயம் தற்போது முருகதாஸ் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து இயக்கி நாளை மறு நாளுக்கு ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் படம் ஸ்பைடர் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது இதில் பேசிய முருகதாஸ் படம் ரெலீசெக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதால் மனம் திக் திக் என்று இருக்கிறது என்றார்

இது ஒரு நேரடி தமிழ் படம் இல்லை என்றாலும் ஆனாலும் இயக்குனர் முருகதாஸ் தன் நேரடி படம் போல பாவித்து இருப்பது அவருக்கு பெருமை என்று தான் சொல்லணும் ஆனாலும் இப்படத்தின் ஹீரோ மகேஷ் பாபு கொஞ்சம் தமிழ் என்றால் ஒரு காலத்தில் மரியாதை கொடுக்காமல் இருந்தவர். பல சினிமா நிகழ்சிகளில் கலந்துள்ளார் அப்போது பேட்டி கொடுக்கமாட்டார் அப்படி கொடுத்தாலும் தமிழில் பேசமாட்டார்.ஆனால் இன்று தமிழ் சினிமாவின் தரம் மற்றும் பேர் புகழ் பணம் அதிகம் என்பதால் இங்கு நடிக்கவந்த்தொடு தமிழில் பேசுகிறார்.

எல்லாம் தமக்கு என்றால் எல்லாம் வரும் என்பார்கள் அதுபோல தான் இப்படிப்பட்ட நடிகர்கள் படத்தை எல்லாம் நாம் ஊக்குவிக்க கூடாது என்று தான் சொல்லணும். அதேபோல நேற்று பத்திரிக்கையாளர் ஒருவர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க வேண்டும் என்று கேட்டபோது அதாவது இரண்டு சூப்பர் ஸ்டார்களை வைத்து ஏன் படம் இயக்கக்கூடாது என்ற கேள்வியின் போது மகேஷ் பாபு முகம் கொஞ்சம் வாடியது இதில் இருந்து அவருக்கு விஜயவுடன் நடிப்பது பிடிக்கவில்லை தான் மட்டும் தான் சூப்பர்ஸ்டார் என்ற நினைப்பும் உள்ளது .

இந்த கேள்விக்கு முருகதாஸ் பதில் சொன்னபோது நிச்சயம் வாய்ப்பு கிடைத்தால் பண்ணுவேன் என்று கூறினார் ஆனாலும் அந்த நேரத்தில் மகேஷ் பாபு அமைதிகாத்தார் தவிர கதை அமைந்தால் நடிப்போம் என்று சொல்லவில்லை ஆகவே இவரை நாம் ஏன் தமிழில் ஆதரிக்கவேண்டும்

Leave a Reply