
நடிகர்கள் மட்டுமின்றி சில நடிகைகளும் தொழில் அதிபர்களாக மாறத் தொடங்கிவிட்டனர். நடிப்பு நிரந்தரம் அல்ல என்பதை உணர்ந்து சம்பாதித்த பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்து லாபம் பார்க்கிறார்கள். அந்த லிஸ்டில் காஜல் அகர்வாலும் இணையவிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது,
நாயகிகள் சினிமா தான் உயிர் என்று இருக்கிறார்கள். எப்போதும் நடித்துக்கொண்டே இருப்போம் என்றும் நம்புகின்றனர். அது தவறு. சினிமா நிரந்தரமானது அல்ல. மார்க்கெட் போனதும் ஓரம் கட்டி விடுவார்கள். எனவே சினிமாவை தவிர்த்து வேறு தொழில் செய்ய நாயகிகள் தயாராக இருக்க வேண்டும்.

நடிப்பதை நிறுத்திவிட்டால் என்ன செய்வது? என்று நான் சிந்திக்க தொடங்கி இருக்கிறேன். வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நடிகைகள் ஏதேனும் ஒரு வியாபார தொழிலில் ஈடுபட வேண்டும். அவர்கள் தகுதிக்கு ஏற்ப அதை தேர்வு செய்து கொள்வதே சிறந்தது.
நான் சினிமாவை விட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டால் மீண்டும் நடிக்க வர மாட்டேன். இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவில் நீடிப்பேன். அதன்பிறகு வேறு துறைக்கு மாறி விடுவேன்” என்றார்.
