Wednesday, April 30
Shadow

புதுமுகம் திராவிடன் நடிக்கும் “ இடி மின்னல் புயல் காதல் “

வெள்ளைப் பன்றிக்குட்டியை முக்கிய கதாப்பாத்திரமாக்கி அதி நவீன தொழில் நுட்பத்துடன், அமெரிக்க தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து “ ஜெட்லி “ என்ற படம் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.
மிகப் பிரமாண்டமாகவும் 3D தொழிற்நுட்பத்துடன் இன்னொரு பரிமாணமான ஐ மேக்ஸ் முறையில் “ ஜெட்லி “தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஜெகன்சாய் இயக்கி வருகிறார்.
ஜெட்லீ படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் சிவாஜி சினிமாஸ் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்திற்கு “ இடி மின்னல் புயல் காதல் “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் திராவிடன் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். நாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு – துலீப்குமார். இவர் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உட்பட பல படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணி புரிந்ததுடன் “ ஜெட்லீ “ படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் யோகேந்திரன் மகேஷ் என்ற புதியவர். இவர் இயக்குனர் ஹரியிடம் பல படங்களுக்கு உதவியாளராக இருந்ததுடன் சிவசண்முகத்திடம் தகப்பன்சாமி, எப்போதும் வென்றான் படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர். அடுத்த மாதம் படப்பிடிப்பு நாகர்கோவிலில் துவங்கி கேரளா, கர்நாடகா,ஆந்திரா ஆகிய மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இளம்பருவ காதல் கதையை யதார்த்தமான திரைக்கதை உத்திகளினால் குடும்ப பொழுதுபோக்குப் படமாக உருவாக்குகிறோம் என்றார் இயக்குனர்.

Leave a Reply