
புதிய இயக்குனர்கள் புதிய களம் புதிய கதைகள் புதிய தொழில் நுட்பகளைஞர்களுடன் வந்து இருக்கும் படம் தான் இலை வித்தியாசமான கதை ஒரு குறும்படமாக எடுக்கவேண்டிய படத்தை திரைப்படமாக எடுத்து அதை போர் அடிக்காமல் விறு விருப்பக சொல்லி இருக்கும் படம் என்று தான் சொல்லணும் . அற்புதமான தொழில் நுட்பம் இலைஞகர்கள் வரு தமிழ் சினிமா பெரும் வெற்றி பாதையை நோக்கி செல்கிறது என்று தான் சொல்லணும்.
சரி இப்ப இலை படத்தை பற்றி பாப்போம்.
இந்த படத்தில் சுவாதி நாராயணன், சுஜித், கிங் மோகன், லிஜூ பிரகாஷ், சிவகுமார் குருக்கள், ஹக்கீம், மாஸ்டர் அஸ்வின் சிவா, கனகலதா, சோனியா, தேவு, ஸ்ரீதேவி அனில், ஸ்ரீஜா திருவல்லா, பேபி சோனியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சந்தோஷ் அஞ்சல், படத்தொகுப்பு – டிஜோ ஜோசப், வசனம் – ஆர். வேலுமணி, இசை – விஷ்ணு வி. திவாகரன், பாடல்கள் – சௌமியா ராஜ், சண்டைப்பயிற்சி – கிருஷ்ண பிரகாஷ், ப்ரோஜக்ட் டிசைனர் – ஷோப குமார்,
இலை நாயகியின் பெயர் தமிழ் நாட்டின் வரை படத்தில் இல்லாத ஒரு கிராமம் எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு கிராமம் விவசாயம் மட்டுமே என்று வாழ்ந்து இருக்கும் மக்கள். பெண்கள் வீட்டு வேலையும் தோட்ட வேலை செய்யும் கருவிகளாக பார்க்கும் மக்கள் இதில் ஒரு வேறு பட்ட பெண் தான் இலை படிக்கணும் என்ற ஆசையுள்ள பெண் அதற்கு அப்பா துணை என் படிக்கணும் பெரிய ஆள வரணும் என்ற எண்ணம் இதற்கு இலை அம்மாவும் தாய் மாமனும் எதிரி இலை படித்தால் எங்கு இவளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவார்களோ என்ற பயம் தாய் மாமனுக்கு அம்மாவை பொறுத்தவரை நான் தனிஆளாக கஷ்ட படுறேன் இவ உதவி செய்யாம படிக்குறேன் படிக்குறேன் போறாளே இதற்கு இவள் அப்பா துணை என்று புலம்பும் ஒரு வெகுளி கதாபாத்திரம்.
இலை பத்தாம் வகுப்பு முழு தேர்வுக்கு படித்து கொண்டு இருப்பாள் எப்படியாவது மாநிலத்தில் முதல் பெண்ணாக வரவேண்டும் என்ற ஆசை இதற்கு அவள் படிப்பு மட்டுமே என்று இருப்பவள் இதே ஊரில் இருக்கும் பண்ணையார் மகள் இலையை பார்த்து பொறாமை. இதற்கு அவள் அப்பா உடந்தை இவள் பரிட்சை எழுதாமல் இருந்தால் என் பெண் முதல் இடம் பிடிப்பால் என்று இலை தாய் மாமனை உன் அக்கா பெண் பரீட்சை எழுதினால் உனக்கு அவள் கிடைக்கமாட்டாள் என்று தூண்டி விட்டு என்ன செய்வது என்று கேட்க என் மாமனை அடித்து போட்டால் அவளால் பரீட்சைக்கு போக முடியாது என்று சொல்ல இலையின் அப்பாவை அடித்து போட்டு விடுகிறார்கள்.
அவள் இதை மாமன்காரேனே அக்காவிடம் அக்கா மாமாவை யாரோ அடித்து போட்டுள்ளார்கள் என்று சொல்ல அவள் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறாள் அப்போது இலை அம்மா நாம் அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்து போறேன் நீ பாப்பா மற்றும் தம்பி வீட்டை பார்த்துகொள் பரிட்ட்சைக்கு போக வேண்டாம் என்று சொல்ல இவளோ மனதில் அய்யோ கடைசி பரிட்சை என்று வீட்டு வேலைகளை முடித்து விட்டு, குழந்தையை தெரிந்தவர்கள் யாரிடமாவது கொடுத்து விட்டு பள்ளிக்கு போய் விடலாம் என்று திட்டம் போடுகிறாள். இவள் வேலைகள் முடித்து பரிச்சை எழுதினாள இல்லையா என்பது தான் மீதிகதை
இதை இயக்குனர் மிக சிறப்பாக விறுவிறுப்பாக திரைகதை அமைத்துள்ளார். என்று தான் சொல்லணும் சில நேரங்களில் நம்மை சேர் நுனிக்கே வர வைக்கிறார் அந்த அளவுக்கு சிறப்பான திரைகதை நிச்சயம் இதற்கு இயக்குனருக்கு ஒரு கைதட்டல் கொடுக்கலாம் ஏன் அரங்கமே பெரும் காட்சிகளில் அதிர்கிறது கைதட்டலில்
இலையாக நடித்த சுவாதி அடேங்கப்பா என்ன அற்புதமான நடிகை ஏற்கனே சில மலையாள படங்களில் நடித்துள்ளார். இப்படி ஒரு நடிகையா என்று வியக்கவைகிறார். எப்படியாவது பரிட்ச்சைக்கு போகணும் என்று வேலைகளை முடித்து தான் தங்கை கை குழந்தையை யாரிடமாவது கொடுக்க வேண்டும் பரீட்சை யும் முக்குயம் தன் தங்கை பாப்பாவும் முக்கியம் என்று போராடும் நேரத்தில் அருமை . தன் தந்தை இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவளின் நடிப்பு நம்மை கண் கலங்கவைகிறார்.
அருமையான ஒளிப்பதிவு மண்வாசம் உள்ள இசை இப்படி அனைவரும் பிரமிக்கவைகிறார்கள். குறிப்பாக VFX காட்சிகள் மிக அற்புதம் மிக பெரிய பொருள் செலவில் எடுக்க படும் படங்களில் கூட இவ்வளவு தத்துருவாமாக கிராபிக்ஸ் காட்சிகள் இல்லை என்று தான் சொல்லணும்.
மொத்தத்தில் இலை மரியாத்யைகுரியவள் Rank4/5