“கொலையாளி அல்ல… காதலன்!” – ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
“கொலையாளி அல்ல… காதலன்!” – ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
ரோஜாப்பூ, துப்பாக்கி, அனல் பறக்கும் பார்வை… காதலும் ஆக்ஷனும் கலந்த மாறுபட்ட அவதாரத்தில் ஷாருக்கான்!
பாலிவுட் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் ஷாருக்கானின் ‘கிங்’ திரைப்படம், அதன் புதிய போஸ்டர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. “கொலையாளி அல்ல… நான் காதலன்!” என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தில் ஷாருக்கான் ஏற்கவிருக்கும் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
உதடுகளுக்கு இடையே ரோஜாப்பூ, கைகளில் துப்பாக்கி, கண்களில் தீவிரம் என முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் ஷாருக்கான் காட்சியளிக்கிறார். காதலின் மென்மையையும் ஆக்ஷனின் தீவிரத்தையும் ஒரே தோற்றத்தில் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தப் போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்விகளையும் எழு...
