Tuesday, October 27
Shadow

நான் முக்கியம் இல்லை கதை தான் முக்கியம் சொன்னது விஜய் கேட்ட பிரபலம் ஆச்சிரியத்தில்

பைரவா ரிலீஸ் நெருங்கிவரும் வேளையில் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 44 நிமிடங்களாம். ஏற்கனவே படத்தின் நீளம் அதிகம் என்பதால் விஜய் நடித்த சில காட்சிகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் எடிட்டர் பிரவீன் இருந்தாராம்.

இதை விஜய்க்கும் அவர் தெரியப்படுத்தியுள்ளார். இதைக்கேட்ட விஜய், ” பரவாயில்லை ப்ரோ. கதைதான் முக்கியம் என் காட்சிகள் அல்ல” என கூறினாராம். இவ்வளவு பெரிய ஸ்டார் இதை சொல்வதை கேட்டு நெகிழ்ந்து போனாராம் பிரவீன்.

Leave a Reply