Monday, January 12
Shadow

தமிழகத்தில் காலாவிற்கு வரவேற்பு குறைவு- டிக்கெட் புக்கிங் மந்தம்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும் ’காலா’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு மிகவும் மந்தமாக உள்ளதாக தமிழகத்தின் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகராக உள்ள ரஜினிகாந்த், இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாகவும் உள்ளார். இவர் நடிக்கும் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளிவரும் போது அது திருவிழா போல கொண்டாடப்படும்.

ஆனால் வரும் 7ம் தேதி வெளிவரும் ’காலா’ படத்திற்கு வழக்கத்திற்கு மாறான தமிழகத்தில் சூழ்நிலை நிலவுகிறது. ஜூன் 7 மற்றும் 8ம் தேதிகளை தவிர, வார நாட்களில் ‘காலா’ படத்திற்கான முன்பதிவு பெரியளவு இல்லை. இதை திரையரங்குகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் நேரடியாக பார்க்க முடிகிறது.