Friday, March 13
Shadow

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் காலா நாயகி

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் அதாவது அப்பா, மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

விஸ்வாசம் படத்தில் ஏற்கனவே நயன்தாராவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்

மூன்றாவது கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். அவர் தான் காலா புகழ் ஈஸ்வரி ராவ்.

Actress Eswari Rao Pics @ A AA Audio Release

மகன் அஜித்துக்கு நயன்தாரா ஜோடியாம். அப்பா அஜித்துக்கு ஜோடியாக நடிக்குமாறு ஈஸ்வரி ராவிடம் கேட்டார்களாம். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்

ரஜினியை அடுத்து அஜித் ஜோடியாகியுள்ளார் ஈஸ்வரி ராவ். திருமணமாகி குழந்தைகள் பெற்று 40 வயதை தாண்டினாலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக முடியும் என்ற நம்பிக்கை ஈஸ்வரியை பார்த்து பிற நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

விஸ்வாசம் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. படத்தில் புதிது புதிதாக ஆட்களை சேர்த்துக் கொண்டே இருக்கிறார் சிவா. அப்படி என்ன கதையை தான் படமாக்குகிறார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்துள்ளது.

காலா படத்தில் மேக்கப் இல்லாமல் செல்வியாக நடித்த ஈஸ்வரி ராவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. விஸ்வாசத்தில் அவருக்கு எப்படிப்பட்ட கதாபாத்திரமோ தெரியலையே.