பழ. கருப்பையா தமிழக அரசியல்வாதி மற்றும் நடிகரும் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தின் ஒரு பகுதியான துறைமுகம் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று 14வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினரானார். இவர் அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் தோன்றி நடித்துள்ளார். பட்டினத்தார் ஒரு பார்வை, அரசியல் சதிராட்டங்கள், காலம் கிழித்த கோடுகள், கண்ணதாசன், காலத்தின் வெளிப்பாடு, எல்லைகள் நீத்த ராம கதை, கருணாநிதி என்ன கடவுளா? என்ற நாவல்களை எழுதியவர்
2016 ஜனவரி 28ஆம் நாள் கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்தநாள் தன்னுடைய துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இவரது மனைவி அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். பின்னர் இவர் ஊடகங்கள் வாயிலாக அதிமுக அரசின் ஊழல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டார்.
இவர் நடித்த படங்கள்: சர்கார், அங்காடித் தெரு, நாடி துடிக்குதடி
இவர் தயாரித்த படங்கள்: இன்று நீ நாளை நான், அந்த ஒரு நிமிடம், பொறுத்தது போதும், வா வா வசந்தமே, நாடி துடிக்குதடி