ஆன்டி இண்டியன் (திரை விமர்சனம் 3.5/5)
சினிமா விமர்சகராக அறியப்படும் 'ப்ளூ சட்டை' மாறன் எனும் இளமாறன் இயக்கியுள்ள முதல் சினிமா 'ஆன்டி இண்டியன்'. சி.இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், பசி சத்யா உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.
பாட்ஷாவை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். பாட்ஷாவின் தாய், தந்தை இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாட்ஷாவை அடக்கம் செய்வதில் சிக்கல் உருவாகிறது. அது தேர்தல் சமயமாகவும் உள்ளது. பாட்ஷாவின் சவத்தை வைத்துக் கொண்டு மதவாதிகளும் அரசியல்வாதிகளும் செய்யும் ஆதாய அரசியலே இப்படத்தின் திரைக்கதை.
தென்கச்சி கோ சுவாமிநாதனின் புறாக் கதையில் துவங்குகிறது இந்த சினிமா. அப்போதே 'ஆன்டி இண்டியன்' பேசப்போகும் கதையின் நோக்கம் நமக்கு புரிகிறது. பட்டிணப்பாக்கத்தில் கடலோரத்தில் வசிக்கும் எளிய மனிதர்கள் சிலரை வைத்துக்கொண்டு இளமாறன் இந்தக் கதையை நமக்குச் சொல்கிறார். படத்தின் போக...