
‘விநோதன்’ பிரபுதேவா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் திரைப்படம். விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் ‘மனசுழற்சி’ எனும் மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவனின் கதை. இந்தக் கதைக்காக வித்தியாசமான பாடல் ஒன்றை இமான் – மதன்கார்க்கி கூட்டணி படைத்துள்ளது. பாலிண்டிரோம் பாடல் என்று இந்தப் பாடல் அழைக்கப்படுகிறது.
பாலிண்டிரோம்(palindrome) என்பது ஒரு சொல் அல்லது வாக்கியத்தைப் பின்னிருந்து முன்னாக படித்தாலும் அதே ஒலியை, பொருளைத் தருவது. எடுத்துக்காட்டாக ‘malayalam’ ‘விகடகவி’, ‘பாப்பா’ போன்ற சொற்களைச் சொல்லலாம். இப்படி இருக்க ஒரு முழு காதல் பாடலை பாலிண்டிரோம் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள் இமானும் மதன்கார்க்கியும்.
இந்திய மொழிகளில் பாலிண்டிரோம்கள் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் பாடல் இது. இந்தப் பாடலை ஹரிசரண் மற்றும் சாஷா ட்ரிபாதி பாடியுள்ளனர்.
இந்த பாலிண்டிரோம் பாடல் ஒரு பாலிண்டிரோம் தேதியில், பாலிண்டிரோம் நேரத்தில், பாலிண்டிரோம் தளத்தில் வெளியாகிறது. 7-1-17 (சனிக்கிழமை) அன்று, மாலை 7:1:17 மணிக்கு, ‘டூபாடூ’ (www.doopaadoo.com) இணைய தளத்தில் வெளியாகிறது.
