
கடினமாக உழைத்தால் இனிப்பான பழங்களை பழங்களை அறுவடை செய்யாலம் என்ற பழமொழிக்கு ஏற்ப, நடிகர் விஷால், ஆக்ஷன்கிங் அர்ஜுன், நடிகை சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம், தனது 100வது நாளை நிறைவு செய்து, இந்த படத்திற்காக கடினமாக உழைத்த குழுவினருக்கு, மகிழ்ச்சி என்ற இனிப்பான பழத்தை சுவைக்க செய்துள்ளது.
வலுவான கருத்தை மையமாக வைத்து கொண்டு உருவாக்கப்பட்ட கதையை, சிறந்த முறையில், திறமையான திரையில் வெளிபடுத்தியதே இந்த படத்தின் வெற்றி காரணமாக அமைந்தது. தற்போது 100வது தொட்டுள்ள இந்த திரைப்படத்தின் வெற்றி, படத்தயாரிப்பாளர், வெளியிட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த 100-வது நாளை கொண்டாடும் வகையில், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்க்கில் வரும் 29ம் தேதி பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே நாளில் நடிகர் விஷாலின் பிறந்த நாளும் கொண்டாடப்படுவதால், இந்த கொண்டாட்டம் இரட்டை கொண்டாட்டமாக இருக்கும் என்று தெரிகிறது.
விஷால் நடிப்பில் இரும்பு திரை திரைப்படம் கடந்த மே மாதம் 11ம் தேதி வெளியான ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சைபர் கிரைம் மற்றும் டிஜிட்டல் உலகின் கருப்பு பக்கங்களுடன் தொடர்புடைய இந்த படத்தின் மூலம் பிஎஸ் மித்திரன் இயக்குனராக மாறியுள்ளார். நடிகர் விஷாலின் சிறந்த நடிப்பு, ஆக்ஷன்கிங் அர்ஜுன், சம்மந்தா மட்டுமின்றி படத்தில் நடித்த அனவைரும் சிறப்பாக நடித்திருந்த்துடன், தொழில்நுட்ப காட்சிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி யுவன்சங்கர் ராஜாவின் இசை, ரூபின்னின் எடிட்டிங், ஜார்ஜ் சி வில்லிம்சின் சிநிமாட்டோகிராபி ஆகியவை படத்தின் ஹைலைட்டாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.