இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா விஷாலின் பிறந்தநாள் விழா
இவ்விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின் விஷாலின் தாயார், சமந்தா,குட்டிபத்மினி,லலிதகுமாரி, உட்பட ஐந்து பேர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
பொதுவாக விஷால் அவர்கள் விழாக்களுக்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுப்பதற்கு ஆகும் தொகையை ஏழை பெண்களின் கல்விக்கு கொடுப்பார். அதுபோல இன்றும் கீர்த்தனா, ஐஸ்வர்யா என்ற இரு பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி தொகையாக வழங்கினார்.
புரட்சி தளபதியின் தந்தை ஜி.கே.ரெட்டி, இளைய தளபதயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
எஸ்.ஏ.சந்திரசேகர்
எவனொருவன் தாய் தந்தையை மதிக்கிறானோ அவனை ஆண்டவன் உயர்த்திக் கொண்டேயிருப்பான். ௯௫ தொண்ணுற்று ஐந்து வரை பல திரைப்படங்கள் நூறு நாட்கள் வரை ஓடும். ஆனால் இப்போது அது ஒரு சில படங்களுக்கு மட்டுமே அமையும். ஜில்லாவிற்கு பிறகு இந்த படம் தன் நூறு நாட்களை எட்டி...