Friday, February 7
Shadow

ஷாருக்கானா இது: வாயைப் பிளக்கும் ரசிகர்கள்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிகைகள் கேத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஷாருக்கான், உயரம் குறைந்த மனிதராக நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், படத்திற்கு தலைப்பு வைக்காமலே படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில் படத்திற்கு ‘ஜீரோ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனை ஷாருக்கான் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜீரோ படத்தின் சில நொடிகள் ஓடும் டீசரையும் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் ஷாருக்கான் உயரம் குறைந்த மனிதராக ஆடிப்பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஷாருக்கானின் தோற்றம் கிராபிக்சில் உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஜீரோ’ டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ‘ஜீரோ’ படம் ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply