Saturday, February 15
Shadow

வெளியானது ஜோதிகா-ரேவதி காமடி வேடத்தில் நடிக்கும் ‘ஜாக்பாட்’ பர்ஸ்ட் லூக்

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு ‘ஜாக்பாட்’ என படக்குழுவினர் தலைப்பிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.