ஜாக்பாட் திரை விமர்சனம் ஜாலி ரைடு(ரேட்டிங் 3.5/5)
ஜோதிகா நடிப்பில் ஜாக்பாட் இன்று திரைக்கு வந்துள்ளது. ஜோதிகா, ரேவதி நடித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணாலாம்.
அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் பற்றிய அறிமுகத்துடன் தொடங்கும் இந்த கதையில் அதை கண்டெடுக்கும் நபர்கள் அதை வைத்து விரைவில் பணக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.
வண்டிகளை திருடுவது, பொது இடத்தில் ஏமாற்றி பணம் வசூலிப்பது என குறுக்கு வழிகளில் வாழ்ந்து வரும் ஜோதிகா மற்றும் ரேவதி இருவரும் ஒரு முறை அவர்கள் ஜெயிலுக்கு சென்றபோது அங்கு ஒரு பாட்டி தன்னிடம் அக்ஷய பாத்திரம் இருக்கிறது என்றும் அதை ஆனந்த்ராஜின் வீட்டில் குழி தோண்டி புதைத்து வைத்திருப்பதாக சொல்கிறார்.
அதை தேடி ஜோதிகாவும், ரேவதியும் கிளம்புகிறார்கள். அந்த பாத்திரத்தை ஆனந்த்ராஜை மீறி கைப்பற்றினார்களா என்பதே படத்தின் மீதி கதை.
இதுவரை நடந்து வந்த ஜோதிகா முழு ஆக்ஷன் அவதாரத்தில் நடித்துள்ளார். நடிகை ரேவதிக்கு படம் முழுக்க ஜோதிகா...

