
இவர் நடிகர் வில் சிமித்வின் மகன் ஆவார். இவர் 2002ம் ஆண்டு வில் சிமித் நடித்த மென் இன் ப்ளாக் II என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். 2006ம் ஆண்டு தனது தந்தை வில் சிமித் வுடன் சேர்ந்து த பர்சூட் ஒப் ஹப்பிநேச்ஸ் மற்றும் ஆஃப்டர் ஏர்த் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

இவர் 2002ம் ஆண்டு வில் சிமித் நடித்த மென் இன் ப்ளாக் II என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். 2006ம் ஆண்டு தனது தந்தை வில் சிமித் வுடன் சேர்ந்து த பர்சூட் ஒப் ஹப்பிநேச்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக 2007 எம்டிவி திரைப்பட விருது வென்றார். அதை தொடர்ந்து 2008ம் ஆண்டு த டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில் என்ற திரைப்படத்தில் நடித்தார், இந்த திரைப்படம் 1951ம் ஆண்டு வெளியான த டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில் என்ற திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும்.
2010ம் ஆண்டு நடிகர் ஜாக்கி சான் உடன் சேர்ந்து த கராத்தே கிட் என்ற திரைப்படத்தில் நடித்தார். மே 2013ம் ஆண்டு இவர் தனது வில் சிமித் வுடன் சேர்ந்து ஆஃப்டர் ஏர்த் என்ற திரைபடத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை எம். நைட் ஷியாமளன் இயக்கியுள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள்
மென் இன் ப்ளாக் II, த பேர்சுயிட் ஒப் கப்பினஸ், த டே த எர்த் ஸ்டுட் ஸ்டில், த கராத்தே கிட், ஜஸ்டின் பிபர்: நெவர் சே நெவர், ஆஃப்டர் ஏர்த்
இவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள்
ஆல் ஒப் Us,த சூட் லைஃப் ஆப் ஜேக் & கோடி
