Wednesday, April 30
Shadow

ஜூலை காற்றில் – திரைவிமர்சனம் (கவித்துவம்) Rank 3/5

அறிமுக இயக்குனர் சுந்தரம் இயக்கத்தில் அனந்த் நாக் – அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் `ஜூலை காற்றில்’ ஒரு முக்கோண காதல் படம். எதார்த்தமான காதலையும் காதலின் உண்மைத்தன்மை எப்படி இருக்கவேண்டும் என்பதை மிக தெளிவாக சொல்லி இருக்கும் படம்

காதலில் தோல்வியடைந்தால் தாடி வளர்த்துக் கொண்டு சுற்றி, அல்லது காதலித்த பெண்ணை மறக்க முடியாமல் தவிக்கும் படம் அல்ல; இது இன்றைய காதல் படம். இந்தப் படத்தில் காதலிப்பதும், பிரிவதும் என இருப்பதுதான் இன்றைய காதலோ என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் உயர்ந்த பதவியில் இருப்பவர் அனந்த்நாக். அவருக்கு அஞ்சு குரியனைப் பார்த்ததும் காதல். இருவரும் காதலித்து திருமண நிச்சயம் வரை செல்கிறார்கள். ஆனால், அனந்த்நாக்கிற்கு திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு அஞ்சு மீது காதல் இல்லை என்ற ஒரு எண்ணம். அதனால், திருமணம் வேண்டாம் என நிறுத்தி விடுகிறார்.

இதை தொடர்ந்து நடிகை சம்யுக்தா மேனனைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார். அனந்த்நாக்கின் சந்தேக குணமும், அவருடைய முடிவுகளை தன்னிடம் திணிப்பதும் சம்யுக்தாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால், இருவரும் பிரேக்-அப் செய்து கொள்கிறார்கள். இதை தொடர்ந்து கோவா செல்கிறார். அங்கு ஒரு பெண்ணைப் பார்த்து காதலிக்கலாமா என யோசிக்கிறார். ஆனால், அங்குதான் ஒரு டிவிஸ்ட். அப்புறம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

காதலின் உண்மை தன்மையும் பார்த்தவுடன் ஏற்படும் காதலின் பின் விளைவுகளை பற்றியும் ஒரு பெண் நெருங்கி பழகினால் அதை தவறாக எடுத்துக்கொள்ளும் நபர்களின் வக்கிர புத்தியை பற்றியும் இயக்குனர் தெளிவாக சொல்லி இருக்கும் படம் அதேபோல திரைக்கதையில் ஒரு புதுமை என்று முதல் பாகத்தில் மட்டும் கொஞ்சம் நீளமான திரைகதை இதனால் கொஞ்சம் வளவலப்பு இல்லையென்றால் மேலும் ஒரு புதுமையான காதல் ஓவியமாக இருந்து இருக்கும்

ஆனந்த் நாக் நாயகன் கதையின் ஆழம புரிந்து நடித்து இருக்கிறார் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார்.அதேபோல படத்தின் ஒரு நாயகி அஞ்சு குரியன் அவரின் கதாபாத்திரத்தை மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். மிகவும் மென்மையான பாசிடிவ் கதாபாத்திரம் காதலின் தவிர்ப்பை மிகவும் அழகாக வெளிபடுத்தியுள்ளார்.

படத்தின் மிக பெரிய பலம் ரேவதியாக நடித்துள்ள சம்யுக்த மேனன் இவரின் நடிப்பு வாவ் என்று சொல்லும் அளவுக்கு நடித்துள்ளார் கதாபாத்திரம் புரிந்து அதற்கு ஏற்ப நடித்துள்ளார் அழகிலும் சரி நடிப்பிலும் சரி அருமை நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார்

படத்தின் மிக பெரிய பலம் ஒளிப்பதிவு மற்றும் இசை பின்னணி இசையில் மிகவும் அற்புதமான இசையை கொடுத்துள்ளார் ஜோஷ்வா ஸ்ரீதர் அதே போல ஒளிப்பதிவில் பதாதை ஓவியம போல தீட்டியுள்ளார் ஒளிபதிவாளர் டிமல் சேவியர் எட்வர்ட் குறிபபாக இரண்டாம் பாகத்தில் இலங்கையை மிகவும் அழகாக படம் பிடித்துள்ளார்.

மொத்தத்தில் `ஜூலை காற்றில்’ கவித்துவம் Rank 3/5