
ஜூலை காற்றில் – திரைவிமர்சனம் (கவித்துவம்) Rank 3/5
அறிமுக இயக்குனர் சுந்தரம் இயக்கத்தில் அனந்த் நாக் - அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் `ஜூலை காற்றில்' ஒரு முக்கோண காதல் படம். எதார்த்தமான காதலையும் காதலின் உண்மைத்தன்மை எப்படி இருக்கவேண்டும் என்பதை மிக தெளிவாக சொல்லி இருக்கும் படம்
காதலில் தோல்வியடைந்தால் தாடி வளர்த்துக் கொண்டு சுற்றி, அல்லது காதலித்த பெண்ணை மறக்க முடியாமல் தவிக்கும் படம் அல்ல; இது இன்றைய காதல் படம். இந்தப் படத்தில் காதலிப்பதும், பிரிவதும் என இருப்பதுதான் இன்றைய காதலோ என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் உயர்ந்த பதவியில் இருப்பவர் அனந்த்நாக். அவருக்கு அஞ்சு குரியனைப் பார்த்ததும் காதல். இருவரும் காதலித்து திருமண நிச்சயம் வரை செல்கிறார்கள். ஆனால், அனந்த்நாக்கிற்கு திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு அஞ்சு மீது காதல் இல்லை என்ற ஒரு எண்ணம். அதனால், திரும...