Monday, December 6
Shadow

காற்றின்மொழி – திரைவிமர்சனம்(பெண்களின் வசந்தகீதம்)Rank 4/5

கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவுக்கு பொற்காலம் என்று தான் சொல்லணும் ஆம் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை வெளியாகி வருகின்றது. குறிப்பாக பரியேரும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை,ராட்சன் இது போன்ற படங்களில் வரிசையில் இந்த வார ரிலஸ்யில் சிறந்த படமாக ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியாகியிருக்கும் காற்றின் மொழி திரைப்படம்.

பொதுவாக ராதா மோகன் இயக்கத்தில் வெளிவரும் படங்கள்நல்ல ஒரு கதையம்சம் கொண்டபடங்களாக தான் வரும் ஆனால் அவர் இயக்கிய படங்களில் இந்த படம் கொஞ்சம் வித்யாசம் அதேபோல சிறந்த படமும் பெண்களை மீண்டும் ஒரு படி மேல் நிறுத்தியுள்ளார். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கருவாக கொண்டு வந்துள்ள படம்.

திருமணத்துக்கு பிறகு ஜோதிகா தேர்ந்தடுக்கும் படங்கள் எல்லாமே பெண்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதையாக தான் தேர்ந்த்டுத்து நடிக்கிறார். அந்த வரிசையில் இந்த படமும் அடங்கும். ஒரு பெண்ணுக்கு தன் நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை மிக அழகாக எடுத்துகாட்டாக இருக்கும் கதாபத்திரம் அதை மிக அழகாக அருமையாக வெளிபடுத்தியுள்ளார்.

இந்த படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா கதையின் நாயகனாக விதார்த்,லக்ஷ்மி மஞ்சு,குமரவேல்,மோகன் ராம்,மனோபாலா,எம்.எஸ்.பாஸ்கர்,மற்றும் பலர் நடிப்பில் ஏ.எச்.காசிப் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் கதிர் கலை இயக்கத்தில் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் காற்றின்மொழி

தன் நம்பிக்கைக்கு கை கொடுக்கும் படம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஜோதிகா அவரின் கணவர் விதார்த் ஒரு தனியார் கம்பனியில் வேலை பார்ப்பவர் இவர்களுக்கு ஒரு மகன், ஜோதிகா பிளஸ் 2 தவறியவர் இதனால் ஜோதிகா அப்பா அக்கா மிகவும் கேவலாமாக பேசுவார்கள் ஆனால் ஜோதிகாவுக்கு பணம் சம்பாதிக்கணும் தன் கணவனுக்கு உதவனும் என்ற எண்ணம் உள்ளவர் ஆனால் அதிகம் தோல்விகளை சந்திப்பார் இருந்தும் கணவன் மனைவி இரவு குடும்பத்தில் சந்தோசம் அதிகம் பார்ப்பவர்களுக்கு இப்படி ஒரு குடும்பம் நமக்கு அமையாத என்று யோசிக்கும் அளவுக்கு ஒரு சந்தோசம்

இதற்கிடையில் ஜோதிகா ஹெலோ எப் எம் நடத்தும் போட்டியில் கலந்து கொண்டு பரிசு வெல்வார் அப்போது ரேடியோ ஸ்டேஷன் போகும்போது நீங்கலும் ஆர்ஜே ஆகலாம் விளம்பர போர்ட் பார்த்ததும் அவருக்கும் ஆர்ஜே ஆகவேண்டும் என்ற எண்ணம் வரும் அதை உடனே முயற்சியும் செய்வார். அவரின் நம்பிக்கை வீண் போகாமல் அவருக்கு வேலை கிடைக்கும்.ஆனால் அது இரவு நேர நிகழ்ச்சி அதுவும் அந்தரங்களை பற்றி பேசும் நிகழ்ச்சி நிகழ்ச்சியில் சில விஷயங்கள் விதார்த்க்கு பிடிக்காமல் போகிறது அதோடு தன் மனைவியுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்ற ஏக்கம் ஒரு பக்கம் தன் இதனால் குடும்பத்தில் பிரச்னை இந்த நேரம் பார்த்து மகன் பள்ளியில் ஒரு பிரச்னை இதனால் மகன் வீட்டைவிட்டு ஓடிபோகிறான் மீண்டும் ஜோதிகா ஆர்ஜே வேலையை தொடர்கிரா இல்லையா இழந்த சந்தோசம் மீண்டும் குடும்பத்தில் கிடைத்ததா என்பது தான் மீதிகதை

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் யதார்த்த நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார் மொழி சந்திரமுகி படத்திற்கு பிறகு ஓவர் அக்டிங் இல்லாமல் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் அதோடு முதல் முறையாக சொந்த குரலில் பேசி அசத்தியுள்ளார் மிக சிறந்த நடிப்பு அதுவும் என்னால் முடியும் என்று சொல்லும் போது பார்க்கும் நமக்குள் ஒரு நம்பிக்கையை விதைக்கிறார் .

விதார்த் எப்பவும் போல மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் ஜோதிகாவுக்கு ஈடுகொடுத்து நடித்துள்ளார் படத்தின் கதைக்கும் இயக்குனர் நம்பிக்கைக்கும் பலம் சேர்த்து இருக்கிறார்.சிம்பு ஒரு காட்சி வந்தாலும் மனசில் நிற்கிறார்

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம் என்றால் ஹலோ எப் எம் தலைமை அதிகாரியாக நடித்துள்ள லக்ஷ்மி மஞ்சு வாவ் என்று சொல்லும் அளவுக்கு மிக சிறப்பாக நடித்துள்ளார் தெலுங்கு நடிகையான இவர் தமிழில் நடித்துள்ளார் படத்துக்கும் சரி படத்தின் கதைக்கும் சரி மிகவும் பிளஸ் என்று தன் சொல்லணும்

படத்தில் துணை நின்ற மற்ற நட்சத்திரங்கள் மேலும் பலம் செர்த்திருகிரார்கள் படத்தின் கலை இயக்குனர் செட் மிகவும் அருமையாக உள்ளது

ஏ.எச்.காசிஃப் இசையில் பின்னணி இசை அழகு. (இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் மைத்துனர்) பொண்டாட்டி சாங் பென்ட்டாஸ்டிக்! ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலை அப்படியே இறக்கி வைத்திருப்பதால், இசையமைப்பாளருக்கு வேலை கம்மி. நமக்கும் என்டர்டெயினிங்! மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் எம்.எஸ்.பாஸ்கர் கூட அழகாக இருக்கிறார் ஜோதிகாவுக்கு கேட்கணுமா

மொத்தத்தில் காற்றின்மொழி பெண்களின் வசந்தகீதம் Rank 4/5

CLOSE
CLOSE