
காதல் கசக்குதய்யா இன்று வெளியாகும் ஒரு மிக சிறந்த படம் என்று தான் சொல்லணும். என்னடா விமர்சனம் ஆரம்பத்திலே இப்படி ஒரு ஆரம்பம் என்று யோசிக்காதீங்க உண்மையில் இந்தபடத்தின் இயக்குனர் துவாரக் ராஜா மிக சிறந்த இயக்குனர் முதல் படம் யார் இதற்கு முன் இவர் யார் என்ன படத்தில் வேலை செய்தார் என்பது எல்லாம் ஒரு கேள்வி குறியாக தான் இருக்கும் இந்த படம் பார்த்து வெளியில் வரும் போது ஒரு படத்தில் என்ன என்ன தேவையோ அதை அனைத்தையும் மிக சிறப்பாக் அழகா சொல்லி இருப்பவர் இந்த இயக்குனர்.
இந்த படத்தின் புகைப்படங்கள் எல்லாம் பார்க்கும் போது மீண்டும் ஒரு பள்ளிகூட காதல் வயதுக்கு மீறிய செயல்கள் உள்ள படம் என்று தோன்ற வைக்கும் ஆனால் இவை எதுவும் இல்லாமல் மிக பெரிய ஆச்சிரியத்தை உண்டுபணியுள்ளார் இயக்குனர் ஆம் ஒரு பள்ளிகூட மாணவி ஒரு ஐ.டி.கம்பனியில் வேலை செய்யும் இளைஞன் துருவாவை காதலிக்கிறார். ஆனால் எல்லா ஹீரோவும் போல உடனே ஓகே சொல்லிவிட்டு அந்த பெண்ணின் படிப்பை கெடுக்கும் ஹீரோ இல்லை இந்த படத்தின் ஹீரோ அந்த பெண்ணுக்கு இந்த வயதில் இது தப்பு என்று சொல்லி திருத்த முயற்சிக்கும் ஹீரோ தான் இந்த படத்தின் ஹீரோ
இதில் இருந்து இந்த இயக்குனரின் நேர்த்தி நமக்கு புரிந்து இருக்கும் இதற்காக இந்த படத்தை பெண்களுக்கு அறிவுரை சொல்லும் படம் என்றும் சொல்லமுடியாது காதலும் வேண்டும் அதில் என்ன மாதிரியான ஒரு கண்ணியம் வேண்டும் என்பதை மிக சிறப்பாக சொல்லி இருக்கிறார். அதே போல அம்மா பாசம் காதல் நட்பு இவை அனைத்தையும் கலந்து மிக சிறப்பாக ஒரு இளமையின் விருந்தாக அற்புதமாக கொடுத்துள்ளார் இயக்குனர்.
இவ்வளவு சிறப்புகளை கொடுத்த இயக்குனர் ஏன் இந்த படத்துக்கு காதல் கசக்குதையா என்று டைட்டில் வைத்தார் என்று தெரியவில்லை மிக சிறப்பான கலகலப்பான ஒரு படம் நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு ஒரு ருபாய் குறையாமல் ரசித்துவிட்டு வரும் படம் என்று சொன்னால் மிகையாகது.
இந்த படத்தில் துருவா, வெண்பா,சார்லி ,கல்பனா,லிங்கா ,ஜெயகணேஷ் அற்றும் பலர் நடிப்பில் பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவுவில் தரன் குமார் இசையில் துவாரக் ராஜா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் இந்த படம் காதல் கசக்குதையா
படத்தின் இயக்குனர் காதலையும் அம்மா செண்டிமெண்ட் நட்பு இவை அனைத்தையும் மிக சிறப்பாக கலந்த ஒரு கலைவையான ஒரு படம் என்று தான் சொல்லணும் படத்தின் நாயகன் நாயகி இப்படி எந்த பலமும் இல்லாமல் கதையும் களத்தையும் நம்பி எடுக்கப்பட்ட படம் நிச்சயம் பாருங்க உங்களை கண்டிப்பாக கவரும் இந்த படம்.
துருவா இவர் ஏற்கனவே திலகர் படம் நடித்துள்ளார் ஆனால் இந்த படத்தில் தான் இவர் ஹீரோ என்ற அந்தஸ்தை இல்லை கதையின் நாயகன் என்று பேர் வாங்குகிறார் இவர் டென்சன் ல சிகரட் பிடிக்கும் விதம் அந்த சிகரட் பிடிபதுக்கு இயக்குனர் கிளைமாக்ஸ் காட்சியில் வைத்து இருக்கும் ஒரு காட்சி மெசஜ் மிக அற்புதம் என்று தான் சொல்லணும் அம்மா உடல் நிலை சரியில்லாமல் அதாவது கோமாவில் இருப்பவர் அந்த நேரங்களில் அம்மாவிடம் பேசும் காட்சியிலும் சரி அம்மா கோமாவில் இருந்து விலகி வரும் போது இவர் வெளிபடுத்தும் நடிப்பு மிகவும் நெகுழ்ச்சியாக இருக்கும்.
இந்த படத்தின் நாயகி வெண்பா அடேங்கப்பா இப்படி இரு தமிழ் நாயகியா என்று வைக்கும்படி நடித்து இருக்கிறார் இயக்குனர்.படத்தின் நாயகி தோற்றத்தை வைத்து இந்த பெண் நாயகியா என்று பார்க்கும் பொது தோணும் ஆனால் படத்தில் மிக பிரமிப்பை உண்டு பண்ணியுள்ளார்.என்று தான் சொல்ல தோன்றவைக்கிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகையாக வர வாய்ப்பு இருக்கு ஆனால் இந்த மாதிரியான கதாபாத்திரம் தேர்ந்த்டுத்து நடிக்கவேண்டும். என்பது முக்கியம்
சார்லி வெண்பா அப்பா எப்பவும் போல மிக சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதையை நான் சொல்லவில்லை காரணம் இந்த கதாபாத்திரம் ஒவ்வொருவரும் ஒரு வித கதை மற்றும் அதற்கான தீர்வை சொல்லி இருப்பார் பெண்ணின் மீது நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை சார்லி ஒரு பெண் ஒரு தாய் தந்தைக்கு மகள் எப்படி ரயுக்கவேண்டும் என்று நாயகி வெண்பா ஒரு பையன் ஒரு தாய்க்கும் இந்த சமூகத்துக்கும் ஒரு காதலிக்கும் எப்படி இருக்கவேண்டும் என்று மிக சிறப்பாக சொல்லி இருப்பவர் இயக்குனர்
நண்பர்களாக வரும் ஜெய்கணேஷ் மற்றும் லிங்கா ஒரு நண்பர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதுக்கு உதரணமாக இருக்கவேண்டும் என்ற கதாபாத்திரம் தான் இந்த இவர்கள் ஹீரோவோடு எச்ச டிக்கும் சிகரட்டுக்கும் வரும் நண்பர்களாக இல்லாமல் எங்கு அடிக்கணும் எங்கு தோல் கொடுக்கணும் என்று சிறப்பான கதாபாத்திரம் அதை மிகவும் உணர்ந்து நடித்துள்ளனர்
மொத்ததில் காதல் கசக்குதையா மிக சிறந்த படம் Rank 4/5
