
காதல் கசக்குதையா – திரைவிமர்சனம் (ஜிலேபி) Rank 4/5
காதல் கசக்குதய்யா இன்று வெளியாகும் ஒரு மிக சிறந்த படம் என்று தான் சொல்லணும். என்னடா விமர்சனம் ஆரம்பத்திலே இப்படி ஒரு ஆரம்பம் என்று யோசிக்காதீங்க உண்மையில் இந்தபடத்தின் இயக்குனர் துவாரக் ராஜா மிக சிறந்த இயக்குனர் முதல் படம் யார் இதற்கு முன் இவர் யார் என்ன படத்தில் வேலை செய்தார் என்பது எல்லாம் ஒரு கேள்வி குறியாக தான் இருக்கும் இந்த படம் பார்த்து வெளியில் வரும் போது ஒரு படத்தில் என்ன என்ன தேவையோ அதை அனைத்தையும் மிக சிறப்பாக் அழகா சொல்லி இருப்பவர் இந்த இயக்குனர்.
இந்த படத்தின் புகைப்படங்கள் எல்லாம் பார்க்கும் போது மீண்டும் ஒரு பள்ளிகூட காதல் வயதுக்கு மீறிய செயல்கள் உள்ள படம் என்று தோன்ற வைக்கும் ஆனால் இவை எதுவும் இல்லாமல் மிக பெரிய ஆச்சிரியத்தை உண்டுபணியுள்ளார் இயக்குனர் ஆம் ஒரு பள்ளிகூட மாணவி ஒரு ஐ.டி.கம்பனியில் வேலை செய்யும் இளைஞன் துருவாவை காதலிக்கிறார். ஆனால் எல்லா ஹீரோவும் போல உடனே ஓக...