Sunday, April 19
Shadow

கமலின் அரசியல் முடிவு நாளை முக்கிய முடிவு வெளியாகும் என்று தகவல்

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா மட்டும் இல்லை இந்திய சினிமாவில் மிக முக்கிய புள்ளி எப்போதும் சினிமா சினிமா என்று தான் தன் வாழ்கையை நடத்தி வந்தவர் ஏன் சினிமாவை தவிர வேறு எதிலும் கவனம் செல்லுத்தாமல் இருப்பவர் சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவில் விடுபவர் என்ற பெயரும் உள்ளவர்.

தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை, அது ஒத்தும் வராது, என்று கூறிவந்த நடிகர் கமல்ஹாசன், சமீபகாலமாக தமிழக அரசியல் விவகாரம் குறித்துஅடிக்கடி தற்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். திடீர் இந்த திருப்பத்துக்கு காரணம் இன்றைய அரசியல் சூழ்நிலைதான் எங்கு தமிழ் மக்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் அதிகமாக கவலைபடகுடியவராக ஆகிவிட்டார் இதனால் அரசியல் வேண்டாம் என்று இருந்தவர் சமீப காலமாக அரசியல் பக்கம் திரும்பியுள்ளார் எண்டு தான் சொல்லணும் .

மேலும் தனது ரசிகர் மன்ற நிர்வாகி சமீபத்தில் கைது செய்யப்பட்ட போது, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு எச்சரிக்கை விடுவதுபோலவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய வழக்கறிஞர்களை நாளை சென்னைக்கு வரவைத்து கமல்ஹாசன் அவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அந்த ஆலோசனைக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றையும் கமல் வெளியிடப்போவதாக கூறப்படுகிறது.

ஆனால், விசாரித்ததில், தனது நற்பணி இயக்கத்தில் உள்ள வழக்கறிஞர்களை மட்டுமே கமல் அழைத்திருப்பதாகவும், அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கும் நோக்கம் ஏதும் இல்லை, என்றும் கூறப்படுகிறது. ஒரு சிலர் இல்லை நாளை மிக பெரிய அறிவிப்பு வரும் என்றும் சொல்லுகிறார்கள் மொத்தத்தில் மக்களுக்கு நல்லது நடந்தால் நல்லது.

Leave a Reply