
கமல்ஹாசன் பாராட்டைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழு – சென்னையில் நடந்த சிறப்பு சந்திப்பு!
மலையாளத்தில் ரசிகர்களின் வரவேற்புடன் கவனம் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், தற்போது தமிழிலும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், படக்குழுவினருக்கு கிடைத்துள்ள முக்கியமான பாராட்டாக அமைந்திருக்கிறது உலகநாயகன் கமல்ஹாசனின் பாராட்டு.
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினர் சென்னையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தில் அவரை சந்தித்தனர். ஏற்கனவே திரைப்படத்தை பார்த்திருந்த கமல்ஹாசன், படத்தின் அணுகுமுறை, திரை வடிவமைப்பு மற்றும் படக்குழுவினரின் உழைப்பு ஆகியவற்றை வெகுவாக பாராட்டியுள்ளார்.
திரைப்படம் குறித்த தனது பார்வையை படக்குழுவினருடன் பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பணிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தொடர்ந்து சிறப்பான படைப்புகளை வழங்க ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த சந்திப்பில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப், உன்னிமாயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் விநியோகஸ்தர்களான ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வெற்றிகரமான படமாகவும் கவனம் பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ் ரசிகர்களுக்காக டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தமிழிலும் தனது ரசிகர் வட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது.
மலையாளத்தில் ஏற்கனவே கவனம் பெற்ற ஒரு திரைப்படத்தை கமல்ஹாசன் பார்த்து, அதன் குழுவினரை நேரில் பாராட்டியிருப்பது படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. குறிப்பாக, திரைப்படத்தின் பணியையும் அதன் திரை அணுகுமுறையையும் கமல்ஹாசன் பாராட்டியிருப்பது, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் பயணத்தில் குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்துள்ளது.
தமிழில் புதிய பார்வையாளர்களை சென்றடையும் முயற்சியில் இருக்கும் படக்குழுவுக்கு, கமல்ஹாசனுடனான இந்த சந்திப்பு மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.

Kamal Haasan Applauds ‘Bethlehem Kudumba Unit’ Team After Watching the Film in Chennai
The team of Bethlehem Kudumba Unit recently had a special meeting with Ulaganayagan Kamal Haasan at his office in Chennai, creating a memorable moment for the cast and crew.
Having already watched the film, Kamal Haasan appreciated the overall work of the team, including the film’s engaging presentation and the efforts behind bringing the story to the screen. He also shared his wishes and words of encouragement with the actors and technicians, making the interaction a memorable one for the entire team.
The meeting was attended by director Girish A.D. and actors Dileesh Pothan, Fahadh Faasil, Kiran Josey, Sangeeth Prathap and Unnimaya. Future Runup Films distributors Arun Narayanan and Anup Kumar were also present.
Produced by Bhavana Studios, Bethlehem Kudumba Unit has already received a positive response from audiences in Malayalam and emerged as a notable success. The film is now reaching Tamil audiences in its dubbed version and is gradually building interest and a new audience base among Tamil film lovers.
Kamal Haasan’s appreciation comes as an added boost to the film’s journey. His positive words about the film and the efforts of its cast and crew have brought immense happiness to the team, while also giving them added encouragement as the movie continues to reach audiences in Tamil.
The meeting between Kamal Haasan and the Bethlehem Kudumba Unit team has thus become a special milestone for the film, adding another memorable chapter to its journey.
