கமல்ஹாசன் பாராட்டைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழு – சென்னையில் நடந்த சிறப்பு சந்திப்பு!
கமல்ஹாசன் பாராட்டைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழு – சென்னையில் நடந்த சிறப்பு சந்திப்பு!
மலையாளத்தில் ரசிகர்களின் வரவேற்புடன் கவனம் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், தற்போது தமிழிலும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், படக்குழுவினருக்கு கிடைத்துள்ள முக்கியமான பாராட்டாக அமைந்திருக்கிறது உலகநாயகன் கமல்ஹாசனின் பாராட்டு.
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினர் சென்னையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தில் அவரை சந்தித்தனர். ஏற்கனவே திரைப்படத்தை பார்த்திருந்த கமல்ஹாசன், படத்தின் அணுகுமுறை, திரை வடிவமைப்பு மற்றும் படக்குழுவினரின் உழைப்பு ஆகியவற்றை வெகுவாக பாராட்டியுள்ளார்.
திரைப்படம் குறித்த தனது பார்வையை படக்குழுவினருடன் பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பணிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தொடர்ந்து சிறப்பான படைப்புகளை வழ...






