Tuesday, February 11
Shadow

’இந்தியன் 2’ படத்திற்கும் நிச்சயம் சர்ச்சைகள் கிளம்பும் – கமல்!

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் துவங்கவிருக்கிறது ‘இந்தியன் 2’.

இப்படத்திற்கு நிச்சயம் சர்ச்சைகள் எழும் என கமல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய கமல், ’பத்மாவத்’ வெளியீட்டால் நாட்டை உலுக்கிய கலவரத்தை பற்றி கூறினார். தமிழ்நாட்டில் எவ்வித சலசலப்புமின்றி மக்கள் ‘பத்மாவத்’ திரைப்படத்தை கண்டுகளிக்கின்றனர். இன்றைய தலைமுறையினருக்காக எடுக்கப்பட்ட ‘பத்மாவத்’ படத்துக்கு அடுத்த தலைமுறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும் கமல் கருத்து தெரிவித்தார்.

மேலும், தற்போதுள்ள அரசியல் சூழலில் தனது படங்களான ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அன்பே சிவம்’, ‘தேவர் மகன்’ போன்ற திரைப்படங்களை வெளியிட்டிருக்க முடியாது. யாருக்கு தெரியும் ’இந்தியன் 2’ படத்துக்கும் பிரச்னைகள் வரலாம் என கமல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply