Sunday, October 2
Shadow

Tag: Kamal

ஸ்டாலின், வைகோவுக்கு வேண்டுகோள் விடுத்த கமல்

ஸ்டாலின், வைகோவுக்கு வேண்டுகோள் விடுத்த கமல்

Latest News, Top Highlights
திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் திரிபுராவின் தெற்கு மாவட்டத்தில், பெலோனியா நகரில் வைக்கப்பட்டு இருந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலைகளை பாஜகவினர் மண் அள்ளும் எந்திரம் கொண்டு அகற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல்களுக்கும், லெனின் சிலை அகற்றப்பட்டதற்கும் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, 'இன்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் நாளை பெரியார் சிலை அகற்றப்படும்' என்று முகநூலில் பதிவிட்டார். இவரின் சர்ச்சை கருத்தை தமிழக தலைவர்கள் பலர் கண்டித்தனர். ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இத...
கவுதமியின் சம்பள பாக்கியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்: கமல்

கவுதமியின் சம்பள பாக்கியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்: கமல்

Latest News, Top Highlights
துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிற்கு நடிகர், நடிகைகள் சென்று போனிகபூரின் தம்பி அனில்கபூர் அவரது மனைவி சுனிதா போனி கபூரின் தாயார், குடும்பத்தினர் மற்றும் ஜான்வி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். ஸ்ரீதேவியுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் போனி கபூர் வீட்டுக்கு சென்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இதில் நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறிவிட்டு சென்னை திரும்பியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் கமல் பேசும்போது, ‘ஸ்ரீதேவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். ஐஐடி வளாகத்தில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது கண்டனத்துக்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழகத்தி...
இந்தியன் – 2 படத்தின் கதை கசிந்தது

இந்தியன் – 2 படத்தின் கதை கசிந்தது

Latest News, Top Highlights
தனிக்கட்சி தொடங்கி உள்ள கமல்ஹாசன் கைவசம் உள்ள 3 படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும். சபாஷ் நாயுடு படம் பாதியில் நிற்கிறது. இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் தயாராகி உள்ளார். இயக்குனர் ஷங்கர் கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு பட வேலைகளை ஆரம்பித்தார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளதால் இந்த படத்தில் மக்களை கவரும் புதிய விஷயங்களை சேர்க்கின்றனர். 1996-ல் வெளியான முதல் பாகம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பற்றி பேசியது. இரண்டாம் பாகத்தில் அரசியல்வாதிகளின் ஊழல் தோலுரிக்கப்படுகிறது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஊழல்களை இந்த படத்தில் காட்சி படுத்துகின்றனர். வங்கிகளில் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் தொழில் அதிபர...
சம்பள பாக்கி தராமல் கமல் ஏமாற்றி வருகிறார்: கவுதமி குற்றச்சாட்டு

சம்பள பாக்கி தராமல் கமல் ஏமாற்றி வருகிறார்: கவுதமி குற்றச்சாட்டு

Latest News, Top Highlights
கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி இன்னும் தரப்படவில்லை என நடிகை கவுதமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கவுதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசனுடன் இன்னும் நான் இணைந்து செயல்படுவதாக வரும் அண்மை செய்திகளை அறிந்து வேதனை அடைந்தேன். அவருடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில்ரீதியாகவோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கடந்த 2016 அக்டோபர் மாதம் அவரைவிட்டு நான் விலகி வந்ததில் இருந்து என்னுடைய சொந்த முயற்சியில் எனக்காகவும், எனது மகளுக்காகவும் உழைத்து வருகிறேன். அழுத்தமான சூழலில் இருந்து விடுபட்டு நாங்கள் நல்ல சூழலில் இருக்கிறோம். கமலுடன் 13 ஆண்டுகள் இணைந்திருந்த வாழ்வில், அவரது ராஜ்கமல் நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினேன். கமல் நடித்த படங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணி...
’இந்தியன் 2’ படத்திற்கும் நிச்சயம் சர்ச்சைகள் கிளம்பும் – கமல்!

’இந்தியன் 2’ படத்திற்கும் நிச்சயம் சர்ச்சைகள் கிளம்பும் – கமல்!

Latest News, Top Highlights
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் துவங்கவிருக்கிறது ‘இந்தியன் 2’. இப்படத்திற்கு நிச்சயம் சர்ச்சைகள் எழும் என கமல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய கமல், ’பத்மாவத்’ வெளியீட்டால் நாட்டை உலுக்கிய கலவரத்தை பற்றி கூறினார். தமிழ்நாட்டில் எவ்வித சலசலப்புமின்றி மக்கள் ‘பத்மாவத்’ திரைப்படத்தை கண்டுகளிக்கின்றனர். இன்றைய தலைமுறையினருக்காக எடுக்கப்பட்ட ‘பத்மாவத்’ படத்துக்கு அடுத்த தலைமுறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும் கமல் கருத்து தெரிவித்தார். மேலும், தற்போதுள்ள அரசியல் சூழலில் தனது படங்களான ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அன்பே சிவம்’, ‘தேவர் மகன்’ போன்ற திரைப்படங்களை வெளியிட்டிருக்க முடியாது. யாருக்கு தெரியும் ’இந்தியன் 2’ படத்துக்கும் பிரச்னைகள் வரலாம் என கமல் தெரிவித்துள்ளார்....
அரம்பமே இப்படியா – திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷங்கர்

அரம்பமே இப்படியா – திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷங்கர்

Latest News, Top Highlights
விக்ரமின் 'ஐ' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். 1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். பார்ட்-1 மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ள இதற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். தற்போது, இயக்குநர் ஷங்கர் டிவிட்டரில் ‘இந்தியன் 2’ என்று எழ...
கமலுடன் இணைந்த விக்ரம்

கமலுடன் இணைந்த விக்ரம்

Latest News, Top Highlights
விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகவும், கமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து கமல் அவரது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, `திரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்.' என்று கு...
வந்தது அரசியல் கருத்து கணிப்பு கமலா, ரஜினியா, விஐய்யா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

வந்தது அரசியல் கருத்து கணிப்பு கமலா, ரஜினியா, விஐய்யா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

Latest News
தமிழ் சினிமா என்றாலே நம் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இளைய தளபதி விஜய் தான். இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளைய தளபதி விஜய் படங்களில் அதிக அரசியல் வசனங்கள் இருக்கும் அது மட்டுமல்ல நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறிவருகிறார். ஆனால் இவர்களுக்கு முன் நான் அரசியலுக்கு வர போகிறேன்.இன்னும் கொஞ்சம் நாட்களில் கட்சி பெயரை அறிவிப்பேன் என்று கூறினார். இந்நிலையில் NEWS 7 தொலைக்காட்சியில் தற்போது உள்ள சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இளைய தளபதி விஜய் இவர்களில் யார் அரசியலுக்கு வந்தால் ஆதரவு அதிகம் என்ற கருத்துக்கணிப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இளைய தளபதி விஜயை விட உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு 45% பேர் ஆதரவு தெரிவித்தனர். ரஜினிகாந்த் ...
கமலின் முத்தங்களின் மொத்த தொகுப்பு புகைப்படம் உள்ளே?

கமலின் முத்தங்களின் மொத்த தொகுப்பு புகைப்படம் உள்ளே?

Latest News
முத்தம் என்ற வார்த்தை அமிர்தத்தை தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுக படுத்திய முத்தத்தின் ஆசன் அவர்களின் 63 வருடம் முதல் நாளில் இந்த செய்தியை பூ உலகில் பரப்ப பேர் ஆசை.., உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இன்று 63வது பிறந்த நாள் காண்கிறார்.கமல்ஹாசன் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் திரைபடங்களில் மட்டுமல்லாது தெலுங்கு , மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான 3 தேசிய விருதை பெற்றிருக்கிறார். இவர் நடிப்பு மட்டுமல்லாது நடன இயக்குனர், பாடகர், கதாசிரியர் போன்ற எல்லா வகையான துறைகளிலும் சிறந்து விளங்குகிறார். இவர் 5 வயது முதல் நடித்து வருகிறார் ,சன்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பது இவரது வழக்கம். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் கலை திறனை பாராட்டி ஃப்ரான்ஸ் அரசு செவிலியர் விருதை (2016) ஆன்டு வழங்கியுள்ளது. ஆன...
முதலில் தனுஷ் ! பின்னர் தான் ரஜினி, கமல், விஜய்?

முதலில் தனுஷ் ! பின்னர் தான் ரஜினி, கமல், விஜய்?

Latest News
நடிகர் தனுஷ் தமிழ் படங்களில் மட்டுமல்ல இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.தற்போழுது தனுஷ் "The extraordinary journey of the fakir" என்ற ஆங்கில படத்தில் ken Scott என்பவரின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.தமிழ் மொழியில் கௌதம் மேனன் இயக்கத்தில் "எனை நோக்கி பாயும் தோட்டா", வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படங்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் சமூக வலைதளமான டிவிட்டரில் நடிகர் தனுஷை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 60,00,000 லட்சமாக உயர்ந்துள்ளது.ஏனெனில் நடிகர் தனுஷ் தமிழ் மொழி படங்களில் மட்டுமல்ல இந்தி, ஆங்கில படங்களில் நடிப்பதால் அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.பின்னர் நடிகர் ரஜினியை 40,030,000பேரும், கமல்ஹாசன் அவர்களை 20,080,000 பேரும் ,விஜையை 10,030,000 பேரும் டிவிட்டரில் பின்தொடர்கின்றனர். ...