Wednesday, May 29
Shadow

Tag: Shankar

இந்தியன் – 2 படத்தின் கதை கசிந்தது

இந்தியன் – 2 படத்தின் கதை கசிந்தது

Latest News, Top Highlights
தனிக்கட்சி தொடங்கி உள்ள கமல்ஹாசன் கைவசம் உள்ள 3 படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும். சபாஷ் நாயுடு படம் பாதியில் நிற்கிறது. இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் தயாராகி உள்ளார். இயக்குனர் ஷங்கர் கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு பட வேலைகளை ஆரம்பித்தார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளதால் இந்த படத்தில் மக்களை கவரும் புதிய விஷயங்களை சேர்க்கின்றனர். 1996-ல் வெளியான முதல் பாகம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பற்றி பேசியது. இரண்டாம் பாகத்தில் அரசியல்வாதிகளின் ஊழல் தோலுரிக்கப்படுகிறது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஊழல்களை இந்த படத்தில் காட்சி படுத்துகின்றனர். வங்கிகளில் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் தொழில் அதிபர...
’இந்தியன் 2’ படத்திற்கும் நிச்சயம் சர்ச்சைகள் கிளம்பும் – கமல்!

’இந்தியன் 2’ படத்திற்கும் நிச்சயம் சர்ச்சைகள் கிளம்பும் – கமல்!

Latest News, Top Highlights
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் துவங்கவிருக்கிறது ‘இந்தியன் 2’. இப்படத்திற்கு நிச்சயம் சர்ச்சைகள் எழும் என கமல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய கமல், ’பத்மாவத்’ வெளியீட்டால் நாட்டை உலுக்கிய கலவரத்தை பற்றி கூறினார். தமிழ்நாட்டில் எவ்வித சலசலப்புமின்றி மக்கள் ‘பத்மாவத்’ திரைப்படத்தை கண்டுகளிக்கின்றனர். இன்றைய தலைமுறையினருக்காக எடுக்கப்பட்ட ‘பத்மாவத்’ படத்துக்கு அடுத்த தலைமுறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும் கமல் கருத்து தெரிவித்தார். மேலும், தற்போதுள்ள அரசியல் சூழலில் தனது படங்களான ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அன்பே சிவம்’, ‘தேவர் மகன்’ போன்ற திரைப்படங்களை வெளியிட்டிருக்க முடியாது. யாருக்கு தெரியும் ’இந்தியன் 2’ படத்துக்கும் பிரச்னைகள் வரலாம் என கமல் தெரிவித்துள்ளார்....
சங்கரின் பாராட்டை பெற்ற பத்மாவத்

சங்கரின் பாராட்டை பெற்ற பத்மாவத்

Latest News, Top Highlights
பாலிவுட்டில் ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘பத்மாவத்’. இதில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர், அதிதி ராவ் ஆகியோர் நடித்திருந்தனர். சஞ்சய் லீலா பன்சாலியே இசையமைத்திருந்த இதற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் – பன்சாலி புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. பல எதிர்ப்புகளை தாண்டி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸான இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வரும் நிலையில், இயக்குனர் சங்கர், படத்தை பார்த்து அமேஷிங் விஷுவல், பெண்டாஸ்டிக் ஒர்க், பாடல்கள் சிறப்பாக உள்ளது என்று கூறி படக்குழுவினரை...
இந்தியன்-2 பற்றிய பிரமாண்ட தகவலை வெளியிட்ட ஷங்கர்

இந்தியன்-2 பற்றிய பிரமாண்ட தகவலை வெளியிட்ட ஷங்கர்

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு ஷங்கர் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். 1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்தி அசத்தியிருந்தார். முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இயக்குனர் ஷங்கர் டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘இந்தியன் 2’ என்று எழுதப்பட்டிருக்கும் ஹீலியம் பலூனை தைவான் நாட்டில் தனது டீமுடன் சேர்ந்து பறக்கவிட்ட வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீ...
அரம்பமே இப்படியா – திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷங்கர்

அரம்பமே இப்படியா – திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷங்கர்

Latest News, Top Highlights
விக்ரமின் 'ஐ' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். 1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். பார்ட்-1 மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ள இதற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். தற்போது, இயக்குநர் ஷங்கர் டிவிட்டரில் ‘இந்தியன் 2’ என்று எழ...
ஷங்கர் – கமல் இணையும் `இந்தியன் 2′ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

ஷங்கர் – கமல் இணையும் `இந்தியன் 2′ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மெகா வெற்றி பெற்ற படம் `இந்தியன்'. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் - ஷங்கர் மீண்டும் இணையும் `இந்தியன்-2' படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்த பல படங்கள் வரிசைக்கட்டி நிற்பதால் ஏ.ஆர்.ரகுமானால் இந்த படத்திற்கு இசையமைக்க முடியாத நிலைய ஏற்பட்டுள்ளது. எனவே இந்த படத்திற்கு அனிருத்தை இயக்குநர் ஷங்கர் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அனிருத்தோ ...
அருவியை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்

அருவியை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்

Latest News, Top Highlights
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘அருவி’. இப்படத்தில் அருவியாக அதிதிபாலன் நடித்துள்ளார். லக்‌ஷ்மி கோபாலசாமி, ஷிவதா நாயர், ஸ்வேதா சேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தை காஷ்மோரா, ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வெளியிட்டனர். இப்படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் அருவி படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அருவி படத்திற்கு குவிந்து வரும் பாராட்டுக்களால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
பத்திரிக்கையாளரை தாக்கிய இயக்குனர் ஷங்கர் மன்னிப்பு கேட்டார் .

பத்திரிக்கையாளரை தாக்கிய இயக்குனர் ஷங்கர் மன்னிப்பு கேட்டார் .

Latest News
இந்திய சினிமாவின் மிக பெரிய மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இது நாம் அறிந்த விஷயம் தற்போது இவர் இயக்கி கொண்டு இருக்கும் படம் ரஜினிகாந்த் மற்றும் ஹிந்தி பிரபல ஹீரோ அக்ஷய்குமார் எமி ஜாக்சன் மற்றும் பல நடிக்கும் 2.௦ படம் இந்தியாவிலே அதிக பொருள் செலவில் உருவாகும் படம் என்றால் அது இந்த படம் தான் என்று சொல்லணும் . இவர் அதிக செலவில் படம் எடுக்கலாம் அதுக்காக இந்த உலகமே அவருக்கு சொந்தம் ஆகிவிடாது இல்லையா ஆம் நேற்று இவர் படபிப்பில் செய்த தவறால் நடந்த விஷயம் வாங்க பார்க்கலாம். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் '2.0' படப்பிடிப்பு இன்று (புதன்கிழமை) சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. புதன்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ் லாலா தெருவில் 2.0 படப்பிடிப்பு நடைபெற்று வந்ததால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 'தி இந்து' பத்திரிகையாளர்கள் எஸ்.ஆர்.ரகுநாதன்,...
ரஜினிகாந்த் 2.0 படத்துக்கு குட் பை சொன்ன எமி ஜாக்சன்

ரஜினிகாந்த் 2.0 படத்துக்கு குட் பை சொன்ன எமி ஜாக்சன்

Latest News
நடிகை எமி ஜாக்சன் ரஜினி நடித்து வரும் ‘2.ஓ’ படத்திற்கு குட்-பை சொல்லியிருக்கிறார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.ரஜினி நடித்துவரும் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சங்கர் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது எமி ஜாக்சன் தன்னுடைய சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டதாக அவரே தெரிவித்துள்ளார். ‘2.ஓ’ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் முதலில் ரூ.300 கோடிக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்பிறகு ரூ.450 கோடி வரை பட்ஜெட் அதிகரிக்கப்பட்டுள்ளது. ...