‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கான உரிமையை அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு. இதில் ஜெ.வாக கங்கணா ரணாவத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயலலிதாவிற்கு பரதநாட்டியம் தெரியும் என்பதால், அதை கற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் கங்கணா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்கவுள்ளார். ஜெ. கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரிக்கவுள்ளார் கங்கணா ரணாவத். ஜெயலலிதா அவர்களின் 16 வயதிலிருந்து கதை தொடங்கும். கண்டிப்பாக அனைவரும் பிரமிக்க வைக்கும் வகையில் படம் இருக்கும். அமெரிக்காவிலிருந்து மேக்கப் விஷயங்களுக்காக வரவுள்ளனர்.